தென் சீன கடல் பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து குறித்து, விசாரணை நடைபெற்று வருவதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
பசிபிக் கடல் பகுதிகளில் சீனா பல ஆக்கிரமிப்புகளை செய்து வந்த நிலையில், அதனை தடுக்கும் விதமாக அமெரிக்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க விமானமான யு.எஸ்.எஸ் கார்ல் வின்சன் என்ற விமானம், தாங்கி போர்க் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. கப்பல் மேல்தளத்தில் உள்ள ஓடுபாதையில் F35 C ரக போர் விமானம் தரையிறங்க முற்பட்டது.
அதன் காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது. உடனடியாக மீட்பு படை ஹெலிகாப்டர் மூலம் அந்த விமானத்தில் இருந்த விமானி அவசரமாக வெளியேற்றப்பட்டார். அவரது நிலைமை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான விபத்தில் 7 மாலுமிகள் காயமடைந்தனர். வழக்கமான நடவடிக்கையின்போது இந்த விபத்து நேரிட்டதாக அமெரிக்க கடற்படை குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் ,காயமடைந்தவர்களில் மூன்று பேர் சிகிச்சைக்காக மணிலா கொண்டு செல்லப்பட உள்ளதாகவும், அமெரிக்க கடற்படை தகவல் தெரிவிக்கின்றன.