உலகையே உலுக்கி வரும் கொரோனா நோய்த் தொற்று குறித்து இன்னும் மருத்துவர்களுக்கே அது பரவும் முறை குறித்து ஐயமுள்ளது. கடந்த டிசம்பரில் சீனாவின் வுகான் மாகானதில் தோன்றிய கொரோனா தொற்று பிற நாடுகளுக்கு, வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகள் மூலமே பரவ துவங்கியது.
இந்நிலையில் சுமார் 2 மாத ஊரடங்கிற்க்கு பின் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் சில தளர்வுகளை ஏற்படுத்து பொது போக்குவரத்தை படிப்படியாக துவக்க துவங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாக இரயில் மற்றும் விமான போக்குவரத்தை துவங்கி வருகிறது.
இந்நிலையில் வெளிநாட்டு பயணிகள் மூலமாகவே கொரோனா பரவியதால், விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் போது கொரோனா நோய்த்தொற்று பரவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது இது குறித்து பதிலளித்துள்ள அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், விமானத்தில் வடிகட்டிய நிலையில் காற்று சுழற்சி இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் கிருமித் தொற்று எளிதில் பரவுவதில்லை.
அதே சமயம் கொரோனாவை பொருத்த வரை தனி மனித இடைவெளி முக்கியம் என்பதால் அதை விமானத்தில் கடைப்பிடிக்க முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. எனவே அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே விமான போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். அப்படியில்லை என்றால் விமான போக்குவரத்தை தவிர்ப்பது நல்லது. அப்படி விமான பயணம் மேற்கொள்பவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் பயணம் மேற்கொள்வதையே தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பயணத்திற்கு பிறகும் விமானங்கள் கிருமி நாசினி கொண்டும் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.