அடர்த்தியான கண் இமை வளர இனி 1 சொட்டு தேங்காய் எண்ணையை இப்படி பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Rupa

அடர்த்தியான கண் இமை வளர இனி 1 சொட்டு தேங்காய் எண்ணையை இப்படி பயன்படுத்துங்கள்!!

ஆண்,பெண் அனைவரின் முக அழகை அதிகரித்து காட்டுவதில் கண் இமைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்று சொல்லலாம்.இமைகள் கருமையாகவும்,அடர்த்தியாகவும் இருந்தால் முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.ஆனால் அடர்த்தியான கருமை நிற கண் இமைகள் அனைவருக்கும் இருப்பதில்லை.ஊட்டச்சத்து குறைபாடு,உடல் நலக் கோளாறுகளால் கண் இமைகள் தானாக கொட்டுகிறது.

சிலருக்கு கண் இமைகள் செம்பட்டை,வெள்ளை நிறத்தில் இருக்கும்.சிலருக்கு கண் இமைகள் அடர்த்தி குறைந்து லேசாக காணப்படும்.இதனால் தங்கள் இமைகளை அழகாக்க பல முயற்சிகள் எடுத்தும் பயனில்லை என்று பலர் கூறி வருகின்றனர்.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டிற்கும் வீட்டு வைத்தியங்களை முயற்சித்து வந்தீர்கள் என்றால் வசீகரமான கண் இமைகளை சுலபமாக பெற்றுவிட முடியும்.

1)விளக்கெண்ணெய்

தினமும் இரவு கண் இமைகளுக்கு விளக்கெண்ணெய் அப்ளை செய்து விட்டு மறுநாள் குளிர்ந்த நீரினால் கண்களை கழுவி வந்தால் இமைகள் கருமையாகவும்,அடர்த்தியாகவும் மாறத் தொடங்கும்.

2)தேங்காய் எண்ணெய்

தினமும் இரவு கண் இமைகளுக்கு சிறிதளவு தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து விட்டு மறுநாள் குளிர்ந்த நீரினால் கண்களை கழுவி வந்தால் இமைகள் கருமையாகவும்,அடர்த்தியாகவும் மாறத் தொடங்கும்.

3)கற்றாழை

பிரஸ் கற்றாழை ஜெல்லை காட்டன் துணியில்நனைத்து கண் இமைகள் மீது அப்ளை செய்து வந்தால் அடர்த்தியான கருமையான இமைகள் கிடைக்கும்.

4)வைட்டமின் ஈ மாத்திரை

இரு கண் இமைகளுக்கும் வைட்டமின் ஈ மாத்திரையை அப்ளை செய்து வந்தால் அடர்த்தியான கருமையான கண் இமைகளாக மாறும்.

5)ஆலிவ் எண்ணெய்

தினமும் கண் இமைகளுக்கு ஆலிவ் எண்ணெய் அப்ளை செய்து வந்தால் அவை அடர்த்தியாக காட்சியளிக்கும்,