பால் போன்ற சருமம் கிடைக்க தேங்காயை இப்படி பயன்படுத்துங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

0
110

ஆரோக்கிய கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும் தேங்காய் சரும பராமரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்றது.இந்த தேங்காயில் இருந்து பால் எடுத்து பருகி வந்தால் என்றும் இளமை சருமத்துடன் இருக்கலாம்.

தேங்காய் பாலில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பாலை தொடர்ந்து பருகி வந்தால் சரும வறட்சி நீங்கி சருமம் பால் போன்ற மிருதுவாக மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் துருவல் – கால் கப்
2)ஏலக்காய்த் தூள் – சிட்டிகை அளவு
3)நெய் – கால் தேக்கரண்டி
4)வெள்ளை சர்க்கரை – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

படி 01:

முதலில் நல்ல பருப்புள்ள தேங்காயை உடைத்து அதன் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சேமித்துக் கொள்ளுங்கள்.

படி 02:

பின்னர் தேங்காய் பருப்பை பூ போன்று துருவி வைத்துக் கொள்ளுங்கள்.தேங்காய் நார்,தேங்காய் ஓடு போன்ற எதுவும் இருக்கக் கூடாது.

படி 03:

அடுத்து ஏலக்காய் விதையை மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.இதை ஒரு தட்டில் கொட்டி வைத்து விடுங்கள்.

படி 04:

பிறகு துருவி வைத்துள்ள தேங்காயை கொட்டி எடுத்து வைத்துள்ள தேங்காய் தண்ணீரை அதில் ஊற்றி பால் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

படி 05:

பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டிக் கொள்ளுங்கள்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து தயாரித்து வைத்துள்ள தேங்காய்ப் பாலை அதில் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.

படி 06:

பிறகு அரைத்து வைத்துள்ள ஏலக்காய் பொடியை அதில் கொட்டி கலந்து விடுங்கள்.பிறகு சில துளிகள் நெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

படி 07:

இறுதியாக இனிப்பு சுவைக்காக சிறிது வெள்ளை சர்க்கரை சேர்த்து கலந்து பருகுங்கள்.இந்த தேங்காய் பாலை தினமும் பருகி வந்தால் சருமப் பொலிவு கிடைக்கும்.

தேங்காய் பால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருள் என்பதால் தோல் வறட்சி,தோல் சுருக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் தேங்காய் பாலை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.

Previous article5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய புரோட்டீன் உணவுகள் லிஸ்ட் இதோ!!
Next articleசர்வே எண்ணை அறிய புதிய வசதி அறிமுகம்!!தமிழக அரசு!!