தேமல் மறைய பூண்டு பல் + துளசியை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!! 100% ரிசல்ட் கிடைக்கும்!!

Photo of author

By Divya

தேமல் மறைய பூண்டு பல் + துளசியை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!! 100% ரிசல்ட் கிடைக்கும்!!

Divya

உங்கள் சருமத்தில் தேமல்,வெண் புள்ளி,சொறி சிரங்கு போன்ற பாதிப்புகளை குணப்படுத்திக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

தீர்வு 01:-

1)சீத்தா பழம் – ஒன்று
2)வெள்ளை பூண்டு – நான்கு

முதலில் சிறிய அளவு சீத்தா பழ சதைப்பற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.இரண்டு தேக்கரண்டி அளவு இருந்தால் போதுமானது.

அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு நான்கு பல் வெள்ளைப்பூண்டை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த சீத்தாப்பழ பேஸ்ட்டை சருமத்தில் அப்ளை செய்தால் தேமல் சீக்கிரமாக மறைந்துவிடும்.

தீர்வு 02:-

1)வெற்றிலை – ஒன்று
2)துளசி இலை – சிறிதளவு
3)வெள்ளைப்பூண்டு – நான்கு

முதலில் ஒரு வெற்றிலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து சிறிதளவு துளசி இலைகளை பாத்திரத்தில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு நான்கு வெள்ளைப்பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது மிக்சர் ஜார் எடுத்து நறுக்கி வைத்துள்ள வெற்றிலை,துளசி இலை மற்றும் வெள்ளைப்பூண்டு பற்களை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்டை தேமல் மீது பூசி வந்தால் ஓரிரு வாரங்களில் அவை மறைந்துவிடும்.சொறி சிரங்கு,படர் தாமரை,வெண் புள்ளி போன்ற பாதிப்புகளையும் இவை குணமாக்குகிறது.

தீர்வு 03:-

1)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

ஒரு துண்டு கற்றாழையை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து தேமல் மீது பூசினால் அவை சீக்கிரம் மறைந்துவிடும்.

தீர்வு 04:-

1)குப்பைமேனி இலை – கால் கைப்பிடி
2)வேப்பிலை – கால் கைப்பிடி
3)ஊறவைத்த வெந்தயம் – இரண்டு தேக்கரண்டி
4)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி

குப்பைமேனி இலை மற்றும் வேப்பிலையை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் சேர்த்து இரண்டு தேக்கரண்டி அளவு ஊறவைத்த வெந்தயம் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பேஸ்டை தேமல்,வெண் புள்ளிகள் மீது தடவினால் அவை சீக்கிரம் மறைந்துவிடும்.