வழுக்கை,தலை முடி உதிர்வு,முடி வெடிப்பு,இளநரை போன்றவை இக்காலத்து பிள்ளைகளுக்கு சாதாரணமாக நிகழ்கிறது.இன்று இளைய தலைமுறையினர் தங்கள் தலை முடியை முறையாக பராமரிப்பதில்லை.
விளம்பரங்களில் காட்டப்படும் கெமிக்கல் க்ரீமைகளை வாங்கி பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.நம் பாரம்பரிய முறைகள் பற்றி தெரியாததால் 30 வயதிற்குள்ளேயே வழுக்கை பிரச்சனைக்கு ஆளாகிவிடுகின்றனர்.
தலை முடியை முறையாக பராமரிக்க விரும்புபவர்கள் தேங்காய் எண்ணையை பயன்படுத்தலாம்.நம் அம்மா பாட்டிகளின் அடர்த்தியான தலை முடியின் ரகசியம் இதுவே.தேங்காய் பருப்பை நன்கு காய வைத்து அரைத்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
இந்த தேங்காய் எண்ணைய் தலை முடியின் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன்படுகிறது.
உங்களுக்கு நீளமான அடர்த்தியான கருமை கூந்தல் வளர தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் சேர்த்து காய்ச்சி பயன்படுத்தலாம்.
பெரிய நெல்லிக்காயை 10 என்ற எண்ணிக்கையில் எடுத்து வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு செய்ய முடியாதவர்கள் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் பெரிய நெல்லிக்காய் பொடி 25 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அரை லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் நெல்லிக்காய் பொடி சேர்த்து கொதிக்க வைத்து ஆறவிட்டு தலைக்கு பயன்படுத்துங்கள்.தலை முடி நீளமாகவும்,அடர்த்தியாகவும் வளர இந்த எண்ணெய் உதவும்.