உங்களில் பலர் இளம் வயதிலேயே சரும வறட்சி,சரும சுருக்கங்களை கொண்டிருப்பீர்கள்.இதற்கு முக்கிய காரணம் சரும பராமரிப்பின்மை தான்.பப்பாளி காயை அரைத்து க்ரீம் போன்று முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் சுருங்கிய சருமத்தில் இளமை பொலிவு ஏற்படும்.
தேவையான பொருட்கள்:-
1)ஒரு கீற்று பப்பாளி காய்
2)கால் தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள்
3)காய்ச்சாத பால் ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு பப்பாளி கீற்றை தோல் சீவிவிட்டு அதன் சதை பற்றை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.
இதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.அதன் பிறகு மிக்ஸி ஜாரில் இந்த பப்பாளி கீற்றை போட்டு கொள்ளவும்.
அடுத்ததாக காய்ச்சாத பால் தேவையான அளவு ஊற்றி க்ரீமி பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு அதில் கால் தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.
இந்த க்ரீமை முகத்திற்கு அப்ளை செய்வதற்கு முன்னர் சுத்தமான நீரை கொண்டு முகத்தை வாஷ் செய்ய வேண்டும்.பிறகு தயாரித்து வைத்துள்ள க்ரீமை முகம் முழுவதும் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு உலர விடவும்.
பிறகு வெது வெதுப்பான நீரில் முகத்தை வாஷ் செய்யவும்.இப்படி செய்து வந்தால் முகச் சுருக்கங்கள் நீங்கி இளமை தோற்றம் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)ஒரு கீற்று பப்பாளி
2)சிறிதளவு தண்ணீர்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கீற்று பப்பாளியை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு உலர விடவும்.பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி சுத்தம் செய்யவும்.இப்படி தினமும் செய்து வந்தால் முகச் சுருக்கம் நீங்கி இளமை பொலிவு கிடைக்கும்.