மழைகாலத்தில் வீட்டு மாடியில் நீர் கசிவை தடுக்க பெட்ரோலை இப்படி பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Rupa

மழைக்காலம் வந்துவிட்டாலே அனைவரது வீடுகளிலும் நீர் கசிவு ஏற்படுவது வழக்கமான ஒன்று தான்.தொடர் மழையால் வீட்டு மொட்டை மாடியில் நீர் தேங்கி வீட்டிற்குள் கசியும்.மாடி தரை தளத்தில் விரிசல் காணப்பட்டால் மழைக்காலங்களில் இதுபோன்ற நீர்க்கசிவு ஏற்படக் கூடும்.

இந்த விரிசலை சரி செய்ய சிமெண்ட் கலவை பூசினாலும் அவை சில தினங்களில் பயனற்று போய்விடும்.வாட்டர் ப்ரூப் சிமெண்ட் தளம் அமைத்தால் இதுபோன்ற தண்ணீர் கசிவில் இருந்து தப்பிக்க இயலும்.ஆனால் இதுபோன்ற வாட்டர் ப்ரூப் சிமெண்ட் தளம் அமைக்காதவர்களில் மழைக்காலங்களில் படும் பாடு சொல்லி மாளாது.

குறிப்பாக சென்னை போன்ற பெரு நகர மக்கள் அனைவரும் தங்கள் மொட்டை மாடி தரை தளத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.புயல் மழை காலங்களில் பெரும்பாலான வீடுகளில் மழைநீர் தேங்கிவிடுகிறது.இவ்வாறு தேங்கிய நீரை அப்புறப்படுத்தவே பல நாட்கள் ஆகிவிடும் நிலையில் வீட்டு சுவற்றில் நீர் கசிவு இருந்தால் பெரும் தொந்தரவாக மாறிவிடும்.

மொட்டை மாடி தரை தளத்தில் காணப்படும் விரிசலை சரி செய்ய பல முயற்சிகள் செய்து நொந்து போனவர்கள் தற்பொழுது சொல்ல உள்ள ட்ரிக்கை ஒருமுறை பின்பற்றினால் இனி வீட்டு மாடியில் தண்ணீர் கசிவு என்பது எப்பொழுது ஏற்படாது.

முதலில் தெர்மாகோல் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும்.ஒரு பீஸ் இருந்தால் கூட இதற்கு போதும்.அதன் பின்னர் 100 மில்லி அளவு பெட்ரோல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கிண்ணத்தில் பெட்ரோலை ஊற்றி தெர்மாகோலை போட்டு கரைய விடவும்.இப்படி செய்தால் ஒரு பேஸ்ட் கிடைக்கும்.இதை வீட்டு மொட்டை மாடி தரையில் காணப்படும் விரிசலில் பூசினால் தண்ணீர் கசிவு ஏற்படாது.இந்த பசியை ஓட்டை விழுந்த,விரிசல் விழுந்த தண்ணீர் தொட்டி,வாட்டர் டேங்கில் பூசினாலும் தண்ணீர் கசிவு ஏற்படாமல் இருக்கும்.
Ok da
Mutichitu sollaran