கழுத்தில் உள்ள கருமை நீங்க அரிசி மாவை இப்படி யூஸ் பண்ணி பாருங்கள்!!

Photo of author

By Rupa

உங்களில் பலருக்கு கழுத்தை சுற்றி கருமையாக இருக்கும்.கழுத்து பகுதியில் அதிகப்படியான சதை பிடிப்பு,வெயில்,அலர்ஜி,அதிகமான வியர்வை சுரத்தல் போன்ற காரணங்களால் அவ்விடத்தில் கருமை ஏற்படுகிறது.இந்த கழுத்து கருமையை போக்கும் சூப்பர் ஹோம் ரெமிடி இதோ.

தீர்வு 01

1.கடலை மாவு
2.அரிசி மாவு
3.மஞ்சள் தூள்
4.எலுமிச்சை சாறு
5.ரோஸ் வாட்டர்

ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு,இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து கலந்து விடவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.

அதன் பிறகு இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து க்ரீம் பதத்திற்கு கலக்கி கொள்ளவும்.இதை கழுத்தை சுற்றி அப்ளை செய்து கைகளால் நன்கு ஸ்க்ரப் செய்யவும்.இவ்வாறு செய்த பிறகு குளிர்ந்த நீரில் அவ்விடத்தை சுத்தம் செய்யவும்.தொடர்ந்து ஒரு மாதத்திற்கு செய்து வந்தால் கழுத்து கருமை நீங்கிவிடும்.

தீர்வு 02

1.கற்றாழை சாறு
2.வைட்டமின் ஈ மாத்திரை
3.எலுமிச்சை சாறு
3.எலுமிச்சை தோல்

கற்றாழை மடல் ஒன்றை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு ஜெல்லை ஒரு கப்பில் போட்டுக் கொள்ளவும்.அதன் பின்னர் இரண்டு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளவும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று முறை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

பிறகு மிக்ஸி ஜாரில் 10 எலுமிச்சை பழ தோலை,கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அரைத்த பேஸ்டை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.அதன் பிறகு வைட்டமின் ஈ மாத்திரையை அதில் போட்டு கூழ் பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்.

பிறகு இதை ஆறவைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும்.இதை கழுத்து பகுதியில் அப்ளை செய்து ஒரு எலுமிச்சை தோலை வைத்து ஸ்க்ரப் செய்து சுத்தப்படுத்தவும்.இப்படி தினமும் செய்து வந்தால் எளிதில் கழுத்து கருமை நீங்கிவிடும்.