மஞ்சள் நிற பற்களை பால் போன்று வெண்மையாக்க உப்பை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!!

0
222
Use salt like this to whiten yellow teeth like milk!!
Use salt like this to whiten yellow teeth like milk!!

மஞ்சள் நிற பற்களை பால் போன்று வெண்மையாக்க உப்பை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!!

மாறி வரும் உணவுமுறை பழக்கத்தால் உங்களுடைய பற்களின் நிறம் வெள்ளை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடுகிறது.அது மட்டுமின்றி பல் சொத்தையாதல்,வாய்துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.இது போன்ற எந்த பாதிப்புகளையும் சந்திக்காமல் இருக்க கீழ்கண்ட இந்த கை வைத்தியம் கட்டாயம் தங்களுக்கு உதவும்.

1)படிகாரம்
2)இந்துப்பு
3)மஞ்சள் தூள்
4)தேங்காய் எண்ணெய்
5)பூண்டு

ஒரு துண்டு படிகாரம் மற்றும் ஒரு தேக்கரண்டி இந்துப்பை வாணலியில் போட்டு லேசாக வறுத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்,ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் இரண்டு பல் பூண்டை இடித்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அரைத்து வைத்திருக்கும் இந்துப்பு மற்றும் படிக்காரத் தூளை அதில் சேர்த்து குழைத்து கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்டை கொண்டு பற்களை துலக்கி வந்தால் மஞ்சள் நிற பற்கள் வெண்மையாக மாறும்.

மற்றொரு தீர்வு:-

1)ஆப்பிள் சீடர் வினிகர்
2)தண்ணீர்

ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தி பற்களை தேய்த்து வந்தால் மஞ்சள் கறை,பல் சொத்தை,ஈறு வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் சரியாகும்.

1)தேங்காய் எண்ணெய்
2)பேக்கிங் சோடா

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து பற்களை தேய்த்து வந்தால் பல் மஞ்சள் கறை,பல் சொத்தை,பல் ஈறு வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் சரியாகும்.

Previous articleதூசி பட்டாலே தும்மல் அலர்ஜியா.. சூடான பாலில் இதை சேர்த்து குடியுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!
Next articleமூச்சுத் திணறல் மூக்கடைப்பு பிரச்சனைகள் குணமாக்க வேண்டுமா? அப்போ இந்த மருந்தை பயன்படுத்துங்க!