பொதுவாக வெறும் ஷாம்பை மட்டும் நாம் பயன்படுத்திக் கொண்டு வரும்பொழுது முடியின் வேர்க்கால்கள் வறட்சி அடைந்து பொடுகு மற்றும் மற்ற பலவிதமான பிரச்சினைகள் வரும்.
முடி வறட்சி அடைவதால் முடிகள் வலுவிழந்து கூடிய சீக்கிரம் கொட்டி விடும் அபாயமும் ஏற்படும்.
இந்த மாதிரி எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுப்பதற்காக ஷாம்புவுடன் இந்த இரண்டு பொருட்கள் சேர்த்து தலைக்கு பயன்படுத்தி வாருங்கள்.முடி உதிர்வு இருக்காது. முடி மென்மையாக காணப்படும். கருகருவென்று வளரும். பொடுகு தொல்லை, மற்ற தொல்லைகள் நீங்கி விடும்.
தேவையான பொருட்கள்:
1. டீ தூள் 2 ஸ்பூன்
2. தண்ணீர் 400 ml
3. அரை எலுமிச்சம்பழம்
4. ஷாம்பூ
செய்முறை:
1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.
2. அடுப்பில் வைத்து 400ml தண்ணீர் ஊற்றவும்.
3. அந்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் அளவுக்கு நீங்கள் பயன்படுத்தும் எந்த ஒரு டீ தூளாக இருந்தாலும் சரி போடவும்.
4. இது ஐந்து நிமிடம் வரை நன்றாக கொதிக்க வேண்டும்.
5. கொதித்த பின் நன்கு ஆற வைத்து ஒரு பவுலில் வடிகட்டிக் கொள்ளவும்.
6. இப்போது இதனுடன் நீங்கள் பயன்படுத்தும் எந்த ஒரு ஷாம்புவாக இருந்தாலும் இரண்டு ஸ்பூன் அளவுக்கு போட்டுக் கொள்ளவும்.
7. அரை எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து கொள்ளவும்.
8. இதனை நன்றாக கலந்து கொள்ளவும்.
குளிக்கப் போகும் முன் தலையில் எண்ணெய் தேய்த்து அதன்பின் இந்த ஷாம்பு கலந்த கலவையை முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும்.
ஊற வைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. நீங்கள் அப்படியே பயன்படுத்தலாம். டீயை நேரடியாக பயன்படுத்தக்கூடாது. அதனுடன் எண்ணெய், ஷாம்பு கொண்டு தான் பயன்படுத்த வேண்டும்.
வாரத்திற்கு மூன்று முறை செய்து வரும் பொழுது உங்களது முடி அடர்த்தியாகவும் மென்மையாகவும் இருக்கும்.