தொடை இடுக்குகளில் உள்ள கருமையை போக்க இந்த க்ரீம் பயன்படுத்துங்கள்!!
தொடைகள் இரண்டும் உரசிக் கொள்வதால் அவ்விடத்தில் அடிக்கடி காயங்கள் ஏற்பட்டு நாளடைவில் கருமையாக மாறிவிடுகிறது.இந்த கருமை நிறத்தை போக்க இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸ் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
1)மஞ்சள் தூள்
2)நல்லெண்ணெய்
3)துருவிய தேங்காய்
4)கசகசா
5)லெமன் சாறு
ஒரு கிண்ணத்தில் 20 கிராம் கசகசா சேர்த்து தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
பின்னர் இரண்டு தேக்கரண்டி அளவு தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ள வேண்டும்.
பிறகு ஊற வைத்த கசகசாவையும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.இப்பொழுது ஒரு சிறிய அளவு கிண்ணம் எடுத்து அதனுள் அரைத்த தேங்காய் பேஸ்ட் மற்றும் கசகசா பேஸ்டை சேர்த்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு 10 மில்லி நல்லெண்ணெய்,10 கிராம் கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் 10 மில்லி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி தொடை இடுக்குகளில் அப்ளை செய்ய வேண்டும்.
இருபது நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீர் பயன்படுத்தி அவ்விடத்தை சுத்தம் செய்து கொள்ளவும்.இவ்வாறு வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் தொடை கருமை நீங்கிவிடும்.
மேலும் சில தீர்வுகள்:
1)ஓட்ஸ்
2)தயிர்
ஒரு தேக்கரண்டி ஓட்ஸை இரண்டு தேக்கரண்டி தயிர் ஒரு மணி நேரத்திற்கு ஊற விட வேண்டும்.பிறகு இதை க்ரீம் பதத்திற்கு அரைத்து தொடை இடுக்குகளில் பூசி சுத்தம் செய்து வந்தால் கருமை நிறம் நீங்கும்.
1)சர்க்கரை
2)எலுமிச்சை சாறு
ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து தொடை இடுக்குகளில் அப்ளை செய்து வந்தால் அவ்விடத்தில் காணப்படும் கருமை நிறம் மறையும்.