நமக்கு வயதாகி விட்டதை காட்டி கொடுக்கும் முக சுருக்கங்கள் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பேஸ் மாஸ்க் ரெமிடியை ட்ரை பண்ணுங்கள்.
பேஸ் மாஸ்க் 01:
முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய எலுமிச்சை பேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம்.எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள்.
இதை முகத்தில் தடவி கைகளால் ,மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.இவ்வாறு தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் எலுமிச்சை பேஸ் மாஸ்க் பயன்படுத்தி வந்தால் சுருக்கங்கள் நீங்கிவிடும்.
பேஸ் மாஸ்க் 02:
வாழைப்பழ பேஸ் மாஸ்க் முக சுருக்கத்தை நீக்கும்.நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதன் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
பிறகு இதை நன்றாக மசித்து முகத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவினால் முக சுருக்கங்கள் நீங்கிவிடும்.
பேஸ் மாஸ்க் 03:
முகத்தை மிருதுவாக மாற்றும் ஆற்றல் தேங்காய் பாலிற்கு உண்டு.கேரளா பெண்களின் முகம் பொலிவாகவும்,மிருதுவாகவும் இருக்க காரணம் தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பால் தான்.
ஒரு கப் அளவிற்கு தேங்காய் துருவல் எடுத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த தேங்காய் பாலை முகத்திற்கு அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் சுருக்கங்கள் நீங்கிவிடும்.
பேஸ் மாஸ்க் 04:
பப்பாளி பழத்தை பொடியாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு அதில் கால் கப் காய்ச்சாத பால் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கங்கள் நீங்கிவிடும்.