இதை பயன்படுத்துங்கள்! கால் ஆணிக்கு குட்பாய்!!
காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும், உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும் அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் காலில் ஆணி நோய் பலருக்கு வருகிறது.காலில் ஆணி வந்து விட்டால் பாதத்தை தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.
கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது.அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு பெரும் துன்பத்தை தருகிறது. பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.
கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவு பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்து விடலாம் .இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மஞ்சள் ஒரு துண்டு,வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து கால் ஆணிகள் மீது தொடர்ந்து இருபத்தி ஒரு நாட்கள் வரை பூசிவர கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.
கடுகை பயன்படுத்தி கால் ஆணியை சரி செய்யும் மருந்து தயாரிக்கலாம். பாத்திரத்தில் விளக்கெண்ணெய் எடுக்கவும் இதனுடன் வறுத்துப் பொடி செய்த கடுகு, மஞ்சள் பொடி சேர்த்து தைல பதத்தில் காய்ச்சவும் .இதை ஆற வைத்து வடிகட்டி எடுத்து வைக்கவும். இரவு நேரத்தில் தூங்கப் போகும் முன்பு கால்களை சுத்தப்படுத்தி இந்த தைலத்தை தடவினால் கால் ஆணி குணமாகும்.
இஞ்சி சற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பை கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணி நீங்கிவிடும்.
மேற்கூறியவற்றுடன் சரியான காலணிகளை போட வேண்டும் .தினமும் காலை தேய்த்து கழுவி சுத்தம் பேண வேண்டும். தட்டையான இடத்தில் தான் நடக்க வேண்டும் .குதிகால் உயர்ந்த காலணிகளை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு பின்பற்றினால் கால் ஆணிகளை தவிர்க்கலாம்.