உங்கள் வீட்டு தோட்டத்தின் செடிகள் அசுர வேகத்தில் வளர இந்த சத்து டானிக்கை பயன்படுத்துங்கள்!!

0
159
Use this nutrient tonic to make your home garden plants grow faster!!
Use this nutrient tonic to make your home garden plants grow faster!!

உங்கள் வீட்டு தோட்டத்தின் செடிகள் அசுர வேகத்தில் வளர இந்த சத்து டானிக்கை பயன்படுத்துங்கள்!!

உங்களில் பலர் தோட்டம்,மாடி தோட்டம் வைத்திருப்பீர்கள்.நீங்கள் வளர்க்கும் செடி,கொடி,பழ மரங்களுக்கு உரிய சத்துக்கள் கிடைக்கவில்லை என்றால் அவற்றின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.இதனால் சத்தான காய்கறி,பழங்கள் கிடைக்காமல் போகும்.

எனவே செடிகள் செழிப்பாக வளர இயற்கை சத்து டானிக்கை செடிகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டும்.இந்த சத்து டானிக்கை எவ்வாறு தயாரித்து பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வாழைப்பழ தோல்
2)வெங்காய தோல்
3)காய்கறி வேஸ்ட்
4)நாட்டு மாட்டு கோமியம்
5)நாட்டு மாட்டு சாணம்

செய்முறை:-

ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் ஒரு கைப்பிடி அளவு வாழைப்பழ தோல்,ஒரு கைப்பிடி அளவு வெங்காய தோல் மற்றும் காய்கறி வேஸ்ட் போட்டு கலந்து கொள்ளவும்.

அதன் பின்னர் நாட்டு மாட்டு கோமியம் ஒரு லிட்டர் மற்றும் நாட்டு மாட்டு சாணம் 1/2 கிலோ அளவு போட்டு ஒரு கம்பு கொண்டு நன்கு கலந்து விடவும்.

இதை காற்று புகாதவாறு ஒரு மூடி போட்டு மூடிக் கொள்ளவும்.இரண்டு தினங்களுக்கு ஒருமுறை ஒரு கம்பு கொண்டு நன்கு கலக்கி விடவும்.இரண்டு வாரங்கள் கழித்து 10 லிட்டர் தண்ணீரில் தயாரித்து வைத்துள்ள கரைசல் 500 மில்லி அளவு கலந்து செடிகளின் வேர்ப்பகுதியில் ஊற்றி விடவும்.இவ்வாறு செய்தால் செடிகள் பூச்சி தாக்குதல் இன்றி ஆரோக்கியமாக வளரும்.

Previous articleஉங்கள் கஷ்டங்கள் தீர இன்று இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் இதை மறக்காமல் செய்யுங்கள்!!
Next articleஉங்கள் வீட்டு பழைய பித்தளை பாத்திரங்கள் கடையில் வாங்கியது போல் பளிச்சிட இதை மற்றும் ட்ரை பண்ணுங்கள்!!