முடி உதிர்வு தவிர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.குறிப்பாக முன் நெற்றி பகுதியில் அதிகளவு முடி உதிர்தல் ஏற்படுவதால் இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை அடைய நேரிடுகிறது.
எனவே முன் நெற்றி பகுதியில் முடி வளர இங்கு தரப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:
1)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி
2)கற்றாழை ஜெல் – இரண்டு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
முதலில் செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் கால் லிட்டர் அதாவது 250 மில்லி வாங்கிக் கொள்ளுங்கள்.
பிறகு இதை ஒரு ஈரமில்லாத பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு பண்ணுங்கள்.இதனிடையே ஒரு கற்றாழை மடலை சிறு சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய் சூடானதும் நறுக்கி வைத்துள்ள கற்றாழை துண்டுகளை போட்டு சிறிது நேரம் கொதிக்க வையுங்கள்.
பிறகு அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய் எண்ணெயை நன்றாக ஆறவிடவும்.பிறகு இதை ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும்.இந்த எண்ணையை முன் நெற்றி பகுதியில் தடவி வந்தால் புதியதாக முடி வளரும்.இந்த கற்றாழை எண்ணெய் முடி உதிர்வை தடுத்து புதிய முடியை வளர வைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)ஆலிவ் எண்ணெய் – 150 மில்லி
பயன்படுத்தும் முறை:
உரலில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயம் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 150 மில்லி ஆலிவ் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.
அதன் பிறகு இடித்த வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி ஆறவிட்டு ஒரு பாட்டிலில் வடிகட்டி சேமித்துக் கொள்ளவும்.
இந்த எண்ணெயை முன் நெற்றி பகுதியில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள்.இவ்வாறு தினமும் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி வந்தால் முன் நெற்றியில் உள்ள வழுக்கையில் முடி வளரும்.