வீட்டில் ஆதிக்கம் செலுத்தும் பல்லி எலி கரப்பான் பூச்சிகளை கொல்ல இந்த ஒரு பொருளை யூஸ் பண்ணுங்க!!

0
198

தங்கள் வீட்டில் எலி,எறும்பு,கரப்பான் பூச்சி,பல்லி மற்றும் ஈக்களின் தொல்லை இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பயன்படுத்தி அதன் தொல்லைக்கு தீர்வு காணுங்கள்.

 

கரப்பான் பூச்சிகள் ஒழிய டிப்ஸ்:

 

மண்ணெண்ணெய்யை கொண்டு கரப்பான் பூச்சி நடமாட்டத்தை கட்டுப்படுத்தி விட முடியும்.ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு மண்ணெண்ணய் கலந்து வீட்டின் மூலை முடுக்கில் ஸ்ப்ரே செய்தால் அதன் நடமாட்டம் கட்டுப்படும்.

 

கிராம்பை பொடித்து வீட்டின் சமையலறை,கழிவறை உள்ளிட்ட இடங்களில் தூவி விட்டால் கரப்பான் பூச்சி வராமல் இருக்கும்.

 

எலி தொல்லையை கட்டுப்படுத்த டிப்ஸ்:

 

வீட்டில் பயன்படுத்தாமல் உள்ள மாத்திரைகளை தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு சிறிது கோதுமை மாவில் தண்ணீர் ஊற்றி பிணைந்து பொடித்து வைத்துள்ள மாத்திரையை கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எலி நடமாடும் இடத்தில் வைத்துவிடுங்கள்.

 

இந்த கோதுமை மாவை எலிகள் சாப்பிட்டால் வயிறு வீங்கி சீக்கிரம் இறைந்துவிடும்.

 

பல்லி தொல்லைக்கு தீர்வு:

 

முட்டை ஓடுகளை தூளாக்கி வீட்டின் சுவற்று பகுதியில் தூவி விட்டால் அதன் வாசனைக்கு பல்லிகள் வராது.

 

புதினா எண்ணெயை தண்ணீருடன் மிக்ஸ் செய்து சுற்றில் ஸ்ப்ரே செய்தால் பல்லி நடமாட்டம் குறையும்.

 

அந்துருண்டையை இடித்து ஒரு காகிதத்தில் கொட்டி பல்லி நடமாடும் இடத்தில் வைத்தால் அவற்றின் தொல்லை ஒழியும்.

 

ஈக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வழிகள்:

 

கிராம்பை பொடித்து தண்ணீரில் கலந்து வீட்டை துடைத்தால் ஈக்கள் நடமாட்டம் குறையும்.சோடா உப்பு மற்றும் சர்க்கரை கலந்த ஸ்ப்ரேயரை ஸ்ப்ரே செய்வதன் மூலம் ஈக்கள் நடமாட்டத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

 

எறும்பு நடமாட்டம் கட்டுப்பட வழிகள்:

 

தண்ணீரில் எலுமிச்சம் பழ சாறை பிழிந்து வீட்டை துடைத்தால் எறும்புகள் நடமாட்டம் கட்டுப்படும்.

 

அதேபோல் மிளகுத் தூளை நீரில் கலந்து வீட்டு தரையை துடைத்தால் எறும்புகள் நடமாட்டம் கட்டுப்படும்.

Previous articleஇந்த நேரத்தில் பேரிச்சம் பழம் சாப்பிட்டால்.. உடலுக்கு முழு ஆரோக்கிய பலன் கிடைக்கும்!!
Next articleமுகத்தை அழகுற செய்யும் சந்தனம்!! சரும வறட்சி இருப்பவர்கள் பயன்படுத்தலாமா?