மூக்கின் மேல் உள்ள பிளாக் மற்றும் வொயிட்ஹெட்ஸ் நீங்க.. இந்த பேஸ்ட்டை பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Divya

நம் முக அழகை அதிகரித்து காட்டும் மூக்கின் மீது கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் இருந்தால் அதை நீக்கிவிடுவது நல்லது.இல்லையென்றால் அவை நம் முகத்தின் அழகையே கெடுத்துவிடும்.மூக்கின் மீது காணப்படும் கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் மறைய கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை அழகு குறிப்பை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)பச்சை பயறு – இரண்டு தேக்கரண்டி
2)அரிசி – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**முதலில் இரண்டு தேக்கரண்டி பச்சை பயறை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக்கி கொள்ள வேண்டும்.

**அடுத்து ஒரு தேக்கரண்டி அரிசியை மிக்சர் ஜாரில் போட்டு நைஸ் பவுடராக்கி கொள்ள வேண்டும்.இந்த இரண்டு பொடியையும் ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

**இந்த பேஸ்டை மூக்கின் மேல் அப்ளை செய்து நன்றாக காயவிட வேண்டும்.பிறகு இதை உரித்து நீக்கிவிட வேண்டும்.இந்த பச்சை பயறு அரிசி பேஸ்ட்டில் பிளாக்ஹெட்ஸ் ஒட்டிக்கொண்டு நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)வேர்க்கடலை – ஒரு தேக்கரண்டி
2)வால்நட் – இரண்டு

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஒரு தேக்கரண்டி வேர்க்கடலையை வாணலியில் போட்டு மொரு மொரு பதம் வரும் வரை வறுக்க வேண்டும்.

**பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.இதனுடன் இரண்டு வால்நட்டை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு இதை ஒரு கிண்ணத்தில் கொட்டி இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்டாக்கி மூக்கின் மேல் பூச வேண்டும்.

**அரை மணி நேரம் கழித்து ஒரு காட்டன் துணியில் தண்ணீர் ஊற்றி பிழிந்து மூக்கின் மீது வைத்து தேய்த்தால் பிளாக்ஹெட்ஸ்,வெள்ளைப்புள்ளிகள் அனைத்தும் வந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)ஓட்ஸ் – ஒரு தேக்கரண்டி
2)பசும் பால் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து இந்த ஓட்ஸ் பவுடரை கிண்ணத்தில் கொட்டி இரண்டு தேக்கரண்டி பசும் பால் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.

**இந்த ஓட்ஸ் பேஸ்டை மூக்கின் மீது அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து சுத்தப்படுத்த வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் பிளாக்ஹெட்ஸ்,வெள்ளைப்புள்ளிகள் அனைத்தும் நீங்கிவிடும்.