முகத்தில் படிந்திருக்கும் கரும்புள்ளி மங்கு நீங்க.. இந்த பேஸ்ட் யூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Divya

முகத்தில் படிந்திருக்கும் கரும்புள்ளி மங்கு நீங்க.. இந்த பேஸ்ட் யூஸ் பண்ணுங்க!!

இன்று பலர் சரும பிரச்சனைகளால் அவதியடைந்து வருகின்றனர்.இந்த பாதிப்புகள் உருவாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

நீங்கள் உங்கள் சருமத்தில் உள்ள மங்கு,கரும்புள்ளிகள்,இறந்த செல்கள் நீங்க இந்த வீட்டு வைத்தியத்தை தவறாமல் பின்பற்றி வரவும்.

1)சந்தனப்பொடி – ஒரு ஸ்பூன்

2)ரோஸ் வாட்டர் – இரண்டு ஸ்பூன்

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சந்தனப்பொடி சேர்த்து கைகளால் கலந்து விடவும்.நீங்கள் பயன்படுத்த கூடிய சந்தனப்பொடி ஒரிஜினலாக இருக்க வேண்டும்.

பிறகு அதில் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்யவும்.30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை சுத்தம் செய்யவும்.இவ்வாறு செய்து வருவதன் மூலம் கரும்புள்ளிகள் மற்றும் மங்குவை எளிதில் மறைய வைக்க முடியும்.

1)க்ரீன் டீ பேக் – ஒன்று

2)தண்ணீர் – இரண்டு ஸ்பூன்

ஒரு கிண்ணத்தில் க்ரீன் டீ பேக் மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும்.இதை முகத்திற்கு அப்ளை செய்து வந்தால் மங்கு,கரும்புள்ளிகள் எளிதில் மறைந்துவிடும்.

1)குப்பைமேனி பொடி – ஒரு ஸ்பூன்

2)தண்ணீர் – இரண்டு ஸ்பூன்

ஒரு தேக்கரண்டி குப்பைமேனி பொடியில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.பிறகு இதை முகம் முழுவதும் அப்ளை செய்யவும்.இவ்வாறு செய்வதன் மூலம் மங்கு மற்றும் கரும்புள்ளி பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

1)பெரிய வெங்காய சாறு – ஒரு ஸ்பூன்

2)ரோஸ் வாட்டர் – அரை ஸ்பூன்

ஒரு தேக்கரண்டி பெரிய வெங்காய சாற்றில் 1/2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் அப்ளை செய்து கொள்ளவும்.பிறகு ஒரு காட்டன் பஞ்சை அதில் நனைத்து முகம் முழுவதும் துடைக்கவும்.இவ்வாறு செய்வதால் மங்கு,கரும்புள்ளிகள்,இறந்த செல்கள் அனைத்தும் நீங்கிவிடும்.