விளக்கில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பு கழண்டு வர.. இந்த பொடியை பயன்படுத்தி க்ளீன் பண்ணுங்க!!

Photo of author

By Divya

விளக்கில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பு கழண்டு வர.. இந்த பொடியை பயன்படுத்தி க்ளீன் பண்ணுங்க!!

Divya

வீட்டு பூஜை அறையில் உள்ள பொருட்களில் படிந்துள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுக்கை கை வலிக்காமல் சுத்தம் செய்வது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்வு 01:

1)எலுமிச்சை சாறு
2)கல் உப்பு

எலுமிச்சம் பழம் ஒன்றை இரண்டாக நறுக்கி அதன் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விளக்கில் ஊற்றி நன்றாக ஊறவிடுங்கள்.

30 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் விளக்கை கழுவினால் எண்ணெய் பிசுபிசுப்பு முழுமையாக நீங்கிவிடும்.

தீர்வு 02:

1)வாஷிங் பவுடர்
2)எலுமிச்சை சாறு

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி வாஷிங் பவுடர் சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் இதை விளக்கின் மீது ஊற்றி தேய்த்தால் எண்ணெய் பிசுக்கு நீங்கி புதிது போன்று ஜொலிக்கும்.

தீர்வு 03:

1)கல் உப்பு
2)தண்ணீர்

பாத்திரம் ஒன்றில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றி நன்கு சூடுபடுத்திக் கொள்ளுங்கள்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி கல் உப்பு போட்டு கரைத்து விளக்கை ஊற வைக்க வேண்டும்.

20 நிமிடங்கள் கழித்து புளி பயன்படுத்தி விளக்கை தேய்த்தால் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

தீர்வு 04:

1)செம்மண் – சிறிதளவு
2)புளி – ஒரு எலுமிச்சம் பழ அளவு

முதலில் சுத்தம் செய்ய வேண்டிய பூஜை பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு பாத்திரத்தில் செம்மண் கொட்டி தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து பூஜை பொருட்களை தேய்க்க வேண்டும்.

பிறகு பூஜை பொருட்களை தண்ணீரில் போட்டு அலசி எடுக்கவும்.அடுத்து ஒரு எலுமிச்சம் பழ சைஸில் புளி எடுத்து பூஜை பொருட்கள் தேய்த்தால் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி புதிது போன்று பளிச்சிடும்.