நமது மூக்கின் மேல் பகுதியில் கரும்புள்ளிகள் இருந்தால் அவை அழகை கெடுத்துவிடும்.எனவே கரும்புள்ளிகளை மறைய வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்பை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)கோதுமை மாவு தவிடு – ஒரு தேக்கரண்டி
2)சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
3)பசுந்தயிர் – ஒன்றரை தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் 10 கிராம் அளவிற்கு கோதுமை எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த கோதுமை மாவை சல்லடையில் கொட்டி சலித்து அதன் தவிட்டை மட்டும் ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
பிறகு ஒரு தேக்கரண்டி வெள்ளை சர்க்கரையை கோதுமை தவிட்டில் கொட்டி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03:
அடுத்து இந்த கலவையில் ஒன்றரை தேக்கரண்டி அளவு பசுந்தயிர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பேஸ்டை மூக்கின் மேல் காணப்படும் கரும்புள்ளிகள் மீது அப்ளை செய்து 15 நிமிடங்களுக்கு காய வைக்க வேண்டும்.
ஸ்டெப் 04:
பின்னர் வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு மூக்கின் மேல் ஊற்றி தேய்த்தால் கரும்புள்ளிகள் சீக்கிரம் நீங்கிவிடும்.கோதுமை தவிடு இல்லாதவர்கள் கம்பு அல்லது கேழ்வரகு தவிடு கூட பயன்படுத்தலாம்.அதேபோல் வெள்ளை சர்க்கரைக்கு பதில் வெள்ளை ரவையை இதற்கு பயன்படுத்தலாம்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)அரிசி மாவு – ஒரு தேக்கரண்டி
2)வெள்ளை சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
3)ரவை – ஒரு தேக்கரண்டி
4)பசும் பால் – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
கிண்ணம் ஒன்றை எடுத்து ஒரு தேக்கரண்டி அரிசி மாவை போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி வெள்ளை சர்க்கரையை போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 02:
பிறகு ஒரு தேக்கரண்டி வெள்ளை ரவையை அதில் கொட்டி கலந்துவிட வேண்டும்.அதன் பிறகு காய்ச்சாத பால் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து அதில் ஊற்றி நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03:
இந்த பேஸ்ட்டை மூக்கை சுற்றி அப்ளை செய்து நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.பிறகு வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு மூக்கை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.