உங்கள் வீட்டு கருத்த வெள்ளிப் பொருட்கள் வெள்ளையாக டூத் பேஸ்டை இப்படயூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Divya

உங்கள் வீட்டு கருத்த வெள்ளிப் பொருட்கள் வெள்ளையாக டூத் பேஸ்டை இப்படயூஸ் பண்ணுங்க!!

Divya

பெண்களுக்கு பிடித்த வெள்ளிப் பொருட்களை எப்படி கருத்துப்போகாமல் பராமரிப்பது என்பது குறித்து இங்கு சொல்லப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)டூத் பேஸ்ட்
2)சமையல் சோடா

செய்முறை விளக்கம்:-

ஒரு தேக்கரண்டி டூத் பேஸ்ட் மற்றும் ஒரு தேக்கரண்டி சமையல் சோடா ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இதை கருத்த வெள்ளிப் பொருட்கள் மீது அப்ளை செய்து பிரஸ் பயன்படுத்தி தேய்க்க வேண்டும்.இவ்வாறு செய்தால் கருத்த வெள்ளி பளபளப்பாக மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு
2)டூத் பேஸ்ட்

செய்முறை விளக்கம்:-

கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி டூத் பேஸ்ட் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட வேண்டும்.

பிறகு இதை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை சில்வர் பொருட்கள் மீது ஊற்றி பிரஷ் கொண்டு தேய்த்தால் கருத்த பொருள் பளபளப்பாக மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)கார்ன்ஃப்ளார் பொடி
2)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

கிண்ணத்தில் கார்னஃப்ளார் பொடி கொட்டி வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்குங்கள்.இதை கருத்துப்போன வெள்ளிப் பொருட்கள் மீது தடவி ஸ்க்ரப் செய்தால் புதிது போன்று பளிச்சிடும்.

தேவையான பொருட்கள்:-

1)சோப் பவுடர்
2)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

ஒரு தேகர்ந்தோ சோப் பவுடரை கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ள வேண்டும்.இதை வெள்ளிப் பொருட்கள் மீது ஊற்றி தேய்த்தால் கருத்த வெள்ளி பளிச்சிடும்.அதேபோல் கற்பூரத்தை வெள்ளிப் பொருட்களுடன் வைத்தால் அவை எப்பொழுதும் கருக்காமல் இருக்கும்.