வீட்டு சமையலறையில் இருக்கின்ற முக்கிய உணவுப் பொருள் மஞ்சள்.உணவின் சுவையை கூட்டும் மஞ்சள் உடலில் உள்ள பல வியாதிகளுக்கு மருந்தாக திகழ்கிறது.மஞ்சள் கலந்த உணவு உட்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அதேபோல் மஞ்சள் தூள் கலந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலை முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.அரிப்பு.பொடுகு தொல்லை ஏற்படுவது தடுக்கப்படும்.கூந்தல் பளபளப்பாக மாற மஞ்சள் எண்ணெய் பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணெய்,ஆலிவ் எண்ணெயில் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்தால் மஞ்சள் எண்ணெய் கிடைக்கும்.இந்த எண்ணெய் எப்படி தயாரிப்பது என்பது குறித்த செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
1)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
2)ஆலிவ் எண்ணெய் – 100 மில்லி
3)தேங்காய் எண்ணெய் – 100 மில்லி
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து 100 மில்லி ஆலிவ் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு 100 மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெயை அதில் சேர்க்கவும்.செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் என்றால் இன்னும் நல்லது.
தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சூடானதும் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை அதில் சேர்த்து சூடாக்கவும்.இரண்டு நிமிடங்களுக்கு எண்ணெயை நன்கு சூடாக்கி அடுப்பை அணைக்கவும்.
இந்த எண்ணெயை நன்றாக ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.இந்த எண்ணெயை தலைக்கு தடவி ஒரு மணி நேரம் ஊறவிடவும்.பிறகு ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசி சுத்தம் செய்யவும்.
மஞ்சள் எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வந்தால் கூந்தல் பளபளக்கும்.முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.வலுவான கூந்தலை பெற முடியும்.பொடுகு பிரச்சனை,தலை அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.