எல்லோருக்கும் பயன் தரும் 10 அசத்தலான வீட்டு குறிப்புகள்!

0
296

*வீட்டில் எறும்புப் புற்று இருக்கும் இடத்தில் சிறிதளவு பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

*துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டு அலசினால் கறைகள் போய்விடும்.

*பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.

*இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை கெடாமல் இருக்கும்.

*காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலுமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது.

*பால் பாத்திரம் அடி பிடிக்காமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.

*கோதுமையை சேமித்து வைக்கும் பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

*சமையலறையிலுள்ள சிங்க் தொட்டியை சுத்தம் செய்யும் போது, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

*எலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால் நீரை கொதிக்க வைத்து அதில் ஐந்து நிமிடம் போட்டு, பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.

*மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால் ஒரு கொதியில் சட்டென்று வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும்.

Previous articleமுகத்தில் கரும்புள்ளி மற்றும் எண்ணைப்பசையை உடனடியாக நீக்கி முகத்தை பளபளப்பாகும் சூப்பரான டிப்ஸ்!
Next articleஇதனால்தான் டைபாய்டு காய்ச்சல் வருகின்றது:? அவசியமாக தெரிந்துகொள்ளுங்கள்! வருமுன் காப்போம்!