உஷார்! குடும்பத்தினர் ஆனி மாதத்தில் இதை செய்யாதீங்க
தமிழ் மாதங்கள் மொத்தம் 12. இந்த ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. உதாரணமாக மார்கழியில் அதிகாலையிலேயே தூங்கி எழுவது நல்லது என்றும், புரட்டாசியில் அசைவம் உண்ணாமல் இருப்பது நல்லது என்றும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இதை இன்றும் நம்மில் பெரும்பாலானோர் கடைபிடித்துதான் வருகிறோம். அதுபோல ஆனி மாதத்தில் வீடு கட்ட தொடங்கக்கூடாது. அதாவது வாஸ்து ஆரம்ப பூஜை செய்ய கூடாது.அதுபோலவே பங்குனி மாதத்தில் வீட்டிற்கு குடிபோக கூடாது. அதாவது கிரகபிரவேசம் செய்யக் கூடாது என்பதை ஆனி அடி கோலாதே கூனி குடி போகாதே என்ற பழமொழியில் நம் முன்னோர்கள் தெளிவாக கூறியுள்ளனர்.
எலி வலையானாலும் தனி வலை என்பது போல நாம் ஒவ்வொருவருக்கும் சொந்தமான வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு அதுவே லட்சியமாகவும் இருக்கும். அதனால் அந்த வீடு கட்ட அரம்பிக்கும் வேலையை நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துதான் செய்ய வேண்டும்… அப்படி கட்டும் வீட்டிற்கு நீண்ட ஆயுள் இருக்க வேண்டும் அல்லவா? மனிதனைப்போல் வீட்டிற்கும் ஆயுள் உண்டு. அத்துடன் அந்த வீட்டில் வாழும் நம் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாகவும் பிரச்னைகள் இன்றியும் வாழ வேண்டும் என்று ஜோதிட ரீதியாகவும் வாஸ்து ரீதியாகவும் நம் முன்னோர்கள் சில விதிமுறைகளை சொல்லி சென்றுள்ளனர்கள்.
ஆனி மாத்தில் பூமி உஷ்ணமாக இருக்கும். வீடு கட்ட தொடங்கும்போது முதலில் பூமியைதான் தோண்டுவோம். அதனால் வீடு கட்டும் பணியை செய்பவர்களுக்கும் அருகில் உள்ளவர்களுக்கும் சில உடல் உபாதைகள் வரும். அப்படி வந்தால் அது உடனே சரியாகாது. காரணம் இப்போதுதான் கத்திரி வெயில் முடிந்து பூமி முழுக்க உஷ்ணம் நிறைந்ததாக உள்ளது. என்னதான் வெயில் காலம் முடிந்து காற்று அடிக்கும் காலம் தொடங்கினாலும் வெயிலின் தாக்கமும் அதனால் ஏற்படும் உஷ்ணமும் பூமியில் இன்னும் இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்தராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி மாதம். ஒரு காலம் முடிந்து இன்னொரு காலம் ஆரம்பிக்க போகுது. அதனால் ஒரு தசை மாறும்போதோ அல்லது முடியும் போதோ பெரிய விஷயங்களை தொடங்குதல் கூடாது.