சுகாதாரத் துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று!!

Photo of author

By Parthipan K

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் அதுல் கார்க்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அன்று பி.சி.ஆர் பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று நெகட்டிவ் என்றும், நேற்றிரவு விரைவுப் பரிசோதனையான ரேபிட் டெஸ்ட் செய்தபோது தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை பரிசோதித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.