chennai: சென்னை விமான நிலையத்தில் உயர் ராக கஞ்சாவை எடுத்து வந்த வடமாநில பெண் கைது.
தமிழகத்தில் சமீப காலமாக மது போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. சாதரான போது மக்கள் முதல் பிரபல நடிகர்கள் என அனைவரும் கஞ்சா, போதை மாத்திரைகள்,போதை ஊசிகள் என போதைப் பொருட்களை பயன்படுத்துதல், சட்டவிரோதமாக அதை விற்றல் என பொலிஸாரால் கைது செய்யப்பட்ட செய்திகள் அவ்வபோது வந்து கொண்டு தான் இருக்கிறது.
குறிப்பாக மாநிலத்தின் தலைநகர் சென்னையில் அதன் புழக்கம் அதிக அளவில் உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வேலைக்கு வரும் இளைஞர்கள் முதல் கல்லூரி பயிலும் மாணவர்கள் வரை கஞ்சா பழக்கத்திற்கு ஆளாகி வருகிறார்கள். வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து போதைப்பொருள் தாரித்து விற்பனை செய்யும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
போதைப்பொருளை கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. அந்த வகையில் விமான நிலையங்களில் போலீசார் தீவிர சோதனைகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்திருக்கிறது. அதாவது, தாய்லந்து பாங்காக்கில் இருந்து விமானம் வழியாக சென்னைக்கு அதிக அளவில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தாய்லாந்தில் இருந்து தனியார் விமானம் வாயிலாக சென்னை வந்த பயணிகளிடம் சோதனை செய்த போது வட மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயர்ரக கஞ்சாவை கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. கஞ்சாவை அவர் கொண்டு வந்த ஆடைகள், காளான், காலிஃப்ளவர் போன்றவற்றில் 6 கிலோ அளவிற்கு பதுக்கி எடுத்து வரப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 6 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.