வாட்டி வறுத்தெடுத்த கத்தரி வெயில்!! இன்றுடன் நிறைவடைகிறது!!
கடந்த 25 நாட்களாக நம்மை வாட்டி வதைத்த கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிகிறது.
தமிழகத்தில் கடந்த மே 4ம் தேதி கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. தமிழகம் முழுவதும்பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி அடித்தது. மக்கள் அனைவரும் வெயின் தாக்கத்தினால் அவதிப்பட்டு வந்தார்கள். இதையடுத்து கத்தரி வெயில் இன்று அதாவது மே 29ம் தேதியுடன் முடிகிறது.
கத்தரி வெயில் இன்றுடன்(மே29) முடியும் நிலையில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று மக்கள் கருதுகிறார்கள், ஆனால் இன்றுடன் கத்தரி வெயில் நிறைவு பெற்றாலும் வெயிலின் தாக்கம் நாளை அதாவது மே 30ம் தேதி வரை இருக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். வெப்பத்தின் அளவு அதன் பிறகே படிப்படியாக குறையத் தெடங்கும்.