ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி!! குறுக்கே மழை வந்ததால் போட்டி ஒத்தி வைப்பு!!

0
107
#image_title
ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி!! குறுக்கே மழை வந்ததால் போட்டி ஒத்தி வைப்பு!!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று அதாவது மே 28ம் தேதி நடைபெறவிருந்த நிலையில் மழை பெய்ததால் இறுதிப் போட்டி இன்று ஒத்தி வைக்கப்பட்டது.
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடவிருந்தது. இந்த இறுதிப்போட்டி மே 28ம் தேதி இரவு 7.30 மணிக்கு அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று இருந்து.
டாஸ் போடுவதற்கு சிறிய நேரத்திற்கு முன்பு இருந்தே அஹமதாபாத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியதால் மைதானம் தார்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டது. இறுதி ஆட்டத்தை காண ப ரசிகர்கள் பலரும் மைதானததிற்கு வந்திருந்த நிலையில் மழை பெய்ததால் அனைத்து ரசிகர்களும் மைதானத்தில் ஒதுங்கி இருந்தனர். மழை நின்றால் இன்று(மே28)  போட்டியை காணலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு 11 மணிக்கு சோகமான செய்தி அறிவிக்கப்பட்டது.
அதாவது நேற்று(மே28) முழுவதும் மழை பெய்ததால் இறுதிப்போட்டி இன்று(மே29) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ரசிகர்கள் அனைவரும் அவர்களின் டிக்கெட்டுகளை பாதுகாப்பாக வைத்து இன்று போட்டியை காண வருமாறு அறிவிக்கப்பட்டது.
இரவு 9.40 மணிக்குள் ஆட்டம் தொடங்க வாய்ப்பு இருந்தால் முழுமையாக இரண்டு அணிகளும் 20 ஓவர்கள் கொண்ட போட்டியில் விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு 9.40க்குள் மழை நிற்கவில்லை என்றால் நள்ளிரவு 12.30 மணிக்கு 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியானது. 12.30 மணிக்கும் மழை நிற்காவிட்டால் இரவு 1 மணிக்கு இரண்டு அணிகளுக்கும் தலா 1 ஓவர் கொண்ட போட்டியும் நடத்த வாய்ப்பு இருக்கும் எனவும் தகவல்கள் வெளியானது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் இன்று(ரிசர்வ் டே) அதாவது மே 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்றும் மழை குறுக்கிட்டு போட்டியை நடத்த முடியாமல் போனால் லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டியை வென்றதாக அறிவிக்கப்பட்டு ஐபிஎல் கோப்பை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வழங்கப்படும். அவ்வாறு கோப்பை வழங்கப்படும் நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டாவது முறையாக சேம்பியன் பட்டத்தை பெறும்.