தடுப்பூசிகள் இலவசம்! சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு எழுதிய கடிதம்!

Photo of author

By Amutha

தடுப்பூசிகள் இலவசம்! சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு எழுதிய கடிதம்!

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சீரம் நிறுவனமானது மத்திய அரசுக்கு கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது.

சீனாவில் தொடங்கிய பிஎஃப் 7 வைரஸ் தற்போது அமெரிக்கா கொரியா,ஜப்பான் பிரேசில்,நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மத்திய அரசானது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயம் கொரோனா பரிசாதனை மேற்கொள்ள மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் பொது இடங்கள் கூட்டம் கூடும் இடங்களில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வலியுறுத்த வேண்டும் என்றும் மாநில அரசாங்கத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியே கொரோனா மருந்து செலுத்துவதற்கான அனுமதியை மத்திய அரசிடம் பெற்று இருந்தது. இதனை அடுத்து இந்திய சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா மத்திய அரசிற்கு இரண்டு கோடி தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிய வந்துள்ளன.

சீரம் இன்ஸ்டியூட்டின் அதிகாரப்பூர்வ அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் ரூ.410 கோடி மதிப்பிலான தடுப்பூசி மருந்துகளை இலவசமாக வழங்குவதாக மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று பி டி ஐ தெரிவிக்கின்றது.

கடந்த கொரோனா பரவலின் போது சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் முறையே கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு வகையான தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு கொரோனா காலத்தில் வழங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சீரம் நிறுவனம் இதுவரை 170 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு தடுப்பூசிகளை தயாரித்து தேசிய நோய் தடுப்பு திட்டத்திற்காக மத்திய அரசாங்கத்திடம் வழங்கியுள்ளது.