நோய்த்தொற்று பரவல் மூன்றாவது அலை எதிரொலி! அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த பிரதமர் நரேந்திர மோடி!

Photo of author

By Sakthi

இந்தியாவில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது அன்றிலிருந்து இன்றுவரையில் மத்திய, மாநில அரசுகள் மிகத் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. அதாவது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்த கட்டுப்பாடுகளை விதித்தும் மத்திய, மாநில அரசுகள் இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதேபோல தடுப்பு ஊசி செலுத்தும் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த விதத்தில் கோடிக்கணக்கான பேருக்கு நோய் தொற்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

நோய் தொற்று தடுப்பூசியின் காரணமாக, இந்த நோய்த்தொற்று மெல்ல, மெல்ல குறையத் தொடங்கியது. ஆனால் திடீரென்று இந்த நோய்த்தொற்று இரண்டாவது அலை பரவி பொதுமக்களையும், மத்திய மாநில அரசுகளையும், அச்சுறுத்தியது.இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவலின் மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் உண்டாகலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை செய்து வருகிறார்கள். அதோடு தடுப்பூசி செலுத்துவதை மிக விரைவாக செயல்படுத்த வேண்டும். மாநிலங்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சுகாதார துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தல் விடுத்திருக்கிறார்.

நாட்டில் நோய்த்தொற்று பரவல் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நேற்றைய தினம் நடந்தது. நோய்த்தொற்று பரவல், அதன் வீரியத்தை எதிர்கொள்வதற்கான சுகாதார அமைப்புகளின் தயார்நிலை ஆக்சிஜன் இருப்பு மற்றும் நோய்த் தொற்று தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் போன்றவை தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கேரளா, மகாராஷ்டிரா, உள்ளிட்ட மாநிலங்களிலும் மற்ற மாநிலங்களிலும் இருக்கின்ற ஒரு சில இடங்களிலும், மாவட்டங்களிலும் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.சிறுவர்கள் சிகிச்சைக்கான படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட அறிக்கைகள் பிராணவாயு படுக்கைகள், தீவிர சிகிச்சை படுக்கைகள், மற்றும் குழந்தைகளுக்கான மிகத் தீவிர சிகிச்சை பிரிவு, அதோடு குழந்தைகளுக்கான சுவாச கருவிகளின் இருப்பை அதிகப்படுத்துதல் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறது.

அந்த சமயத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் போதுமான பரிசோதனையை செய்யவேண்டும் பிராணவாயு சிலிண்டர்கள் மற்றும் பி எஸ் ஏ ஆலைகள் உட்பட பிராண வாயுவை அதிக அளவு கிடைக்கும் சூழ்நிலை மிக விரைவாக விரிவு செய்ய வேண்டும். மாநிலங்களுக்கு எந்தவிதமான தடையும் இல்லாமல் பிராணவாயு கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு தடுப்பூசி போடும் பணியை நாடு முழுவதும் தீவிரப்படுத்த வேண்டும் எனவும், அவர் அறிவுறுத்தி இருக்கின்றார்.

மாநிலங்களுக்கு சுமார் ஒரு லட்சம் பிராணவாயு செறிவூட்டிகள் மற்றும் 3 லட்சம் பிராணவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் தடுப்பூசிகளை பொறுத்தவரையில் இந்தியாவில் இருக்கக்கூடிய 18 வயதிருக்கும் அதிகமானோர் சுமார் 58 சதவீதம் பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 18 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளார்கள்.