தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு! மோடியிடம் எடப்பாடி கதறல்!

Photo of author

By Rupa

தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு! மோடியிடம் எடப்பாடி கதறல்!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது அந்தவகையில் அதிக அளவு கொரோனா தொற்று பாதிப்பானது மகாராஷ்டிரம்,டெல்லி,குஜராத்,மராட்டி,புதுச்சேரி,தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ளது.குறிப்பாக டெல்லியில் அதிக அளவு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையால் ஆக்சிஜன் பற்றாக்குறையும்,படுக்கை வசதி பற்றாக்குறையும் உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் கூறியிருந்தார்.அதுமட்டுமின்றி டெல்லிக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் அனைத்தும் இதர மாநிலங்களுக்கு கிடைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆனால் மத்திய அரசு,போதுமான அளவு வசதிகள் இருப்பதாக கூறியிருந்தது.அதே போல தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அதனால் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.அதில் எடப்பாடி கூறியிருப்பது,தினமும் 2 லட்சம் தடுப்பூசி போட திட்டம் உள்ளதால்,தமிழகத்திற்கு 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் கொரோனா தடுப்பூசி முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும். ரெம்டிசிவேர் மருந்து தயாரிக்கும் மாநிலங்கள்,தங்கள் மாநிலத்திற்கு மட்டும் மருந்துகள் அனுப்பி வைக்க வேண்டும் என்ற முடிவு தவறானது.

ரெம்டிசிவேர் மருந்து தயாரிக்கும் மாநிலங்கள் இதர மாநிலங்களுக்கும் மருந்துள் தடையின்றி கிடைக்க உறுதி செய்ய வேண்டும்.அதேபோல செங்கல்பட்டில் செயல்பட தயாராக உள்ள ஒருகிணைந்த தடுப்பூசி மையத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.மேலும் 2 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் தமிழகத்திற்கு புனேவிலிருந்து இன்று வர இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.