பேரூராட்சி செயல் அலுவலருக்கு பொதுமக்கள் பாராட்டு

Photo of author

By Anand

கொரனோ வைரஸ் பரவலைத் தடுக்க அரசு அறிவித்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் உள்ளாட்சி அமைப்புகள் தங்களது பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றன.

அந்த வகையில் தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி செயல் அலுவலர் திரு.கே.முரளி அவர்கள் மக்களின் தேவைகளையும் குறைகளையும் அறிந்து அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் வடகரை அனைத்து இந்து சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் புல் பூண்டுகளும் புதர்களும் படந்துள்ள மயான பூமியை சுத்தம் செய்து, மயான எரிமேடை மற்றும் மயான நலக்கூடம் ஆகியவற்றை வர்ணம் பூசித்தர வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அக்கோரிக்கை மனுவை பரிசீலித்த செயல் அலுவலர் முரளி அவர்கள் மயான பூமியை ஆய்வு செய்து சுத்தம் செய்ய உத்தரவிட்டார். இதன்படி மயான பூமியில் ஜெ.சி.பி. இயந்திரம் மூலம் முட்புதர்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு எரிமேடை நலக்கூடம் ஆகியவை வர்ணம் பூசப்பட்டது.

ஊரடங்கு காலத்திலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி செயல் அலுவலர் கே.முரளி அவர்களுக்கும் சுகாதார மேற்பார்வையாளர் முருகன் அவர்களுக்கும் வடகரை அனைத்து இந்து சமுதாய நலச்சங்கத்தின் சார்பிலும் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி பொதுமக்கள் சார்பிலும் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேரூர் தி.மு.கழக பொருளாளர் அருணாச்சலம், சௌந்திரபாண்டியன் அனைத்து இந்து சமுதாய நலச்சங்கத்தினர் நேரில் சென்று நன்றி பாராட்டினர்.