பத்திரிக்கையாளர்களிடம் வசமாக சிக்கிய வடிவேல்! திமுகவிற்கு மறைமுகமான ஆதரவு!
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றானது முதல் அலை ,இரண்டாவது அலை தற்போது மூன்றாவது அலையும் உருவாக உள்ளது. முதல் அலையை காட்டிலும் இரண்டாவது ஆலை அதிக உயிர் சேதங்களை சந்தித்தது.தற்போது தமிழகம் முழுவதும் 3-வது அலையை எதிர்கொள்ள அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் தற்போது உள்ளனர்.இரண்டாவது அலையில் தமிழ்நாட்டின் நிவாரணம்போதுமானதாக இல்லாததால்,முதல்வர் பொது நிவாரண நிதிக்காக மக்களிடம் உதவி கேட்டார்.இந்த பொது நிவாரண நிதியில் பொதுமக்கள், அரசியல்வாதிகள்,சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களால் முடிந்த நிவாரண தொகையை கொடுத்தனர்.
தற்போது வரையும் கொடுத்து வருகின்றனர். இச்சமயத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு கொரோனா தொற்று நிவாரண நிதிக்காக இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினனை சந்தித்து பேசினார்.மேலும் அவர் கரோனோ நிவாரண நிதியாக ரூ 5 லட்சம் ரூபாய் ஸ்டாலினிடம் வழங்கினார்.இவர்களின் சந்திப்பிற்கு பிறகு பத்திரிக்கையாளர்கள் நகைச்சுவை புயல் வடிவேல்-யிடம் பல கேள்விகளை கேட்டனர்.அதில் முதல் கேள்வியாக நீங்கள் மேலும் படங்களில் நடிப்பீர்களா என்று பத்திரிக்கையாளர் கேட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக வடிவேல் நல்லதே நடக்கும் எனக் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது, உலகமே உற்றுப் பார்க்கும் அளவிற்கு முதல்வர் ஸ்டாலின் தற்போது கொரோனா தொற்றை கட்டுப் படுத்தியுள்ளார்.
அதனால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் முன்வந்து கொரோனா தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.இதனைத் தொடர்ந்து நகைச்சுவை புயல் வடிவேலு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் வடிவேலு கூறியதாவது, நல்லா இருக்கிற தமிழ்நாட்டை பிறிக்காதீர்கள் என்று குதர்க்கமாக பேசினார்.இது மத்திய அரசு பற்றி தான் என கேட்டவர்கள் புரிந்து கொண்டனர்.மேலும் அவர், தற்போது ஸ்டாலின் ஆட்சி செய்வதை கலைஞர் இருந்து பார்த்து இருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்றும் கூறினார். ஏனென்றால் அந்த அளவிற்கு தற்போது ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றார்.
மேலும் தொலைக்காட்சி ஊழியர் ஒன்றிய அரசு என மத்திய அரசை நம் தமிழகத்தில் அழைப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று வடிவேல் -யிடம் கேட்டார்.அதற்கு அவர் கூறியதாவது, இதற்கு அன்றே முதல்வர் விளக்கம் அளித்து விட்டார்.உங்களுக்கு ஏதேனும் டவுட் என்றால் அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் எனக்கூறி அந்த தனியார் ஊடகத்தின் பேட்டியிலிருந்து நழுவினார். இவர் கூறியதை பார்த்தால் திமுகவிற்கு ஆதரவு அளிப்பது போல உள்ளது.இவரும் ஒரு காலத்தில் திமுக மற்றும் அதிமுகவில் இருந்தும் மாற்றி மாற்றி ஆதரவளித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.