வைகைப்புயல் வடிவேலு மறுபடியும் அரசியல் களத்தில்…..? கிடைத்தது ருசிகர தகவல் ……!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தான் அதிக எண்ணிக்கையில் நடிகர் நடிகையர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர் நடிகர்கள் ராமராஜன் நெப்போலியன் வாகை சந்திரசேகர் வடிவேலு சிங்கமுத்து மற்றும் குண்டு கல்யாணம் குஷ்பூ நடிகைகள் சி ஆர் சரஸ்வதி பாத்திமா பாபு சிம்ரன் குயிலி விந்தியா இதுபோன்ற ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் அந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் இதில் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணிக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார் அவருடைய நகைச்சுவை பிரச்சாரத்தை அனைவரும் ரசித்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த விஜயகாந்த் அதைத்தான் அவர் மிகக் கடுமையாக விமர்சித்தார் திருவாரூரில் கருணாநிதி முன்னிலையில் விஜயகாந்தை அவர் தாக்கி பேசி பிரச்சாரத்தை தொடங்கினார் மு க ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் வடிவேலு அவர்களின் பேச்சுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது மருதமலை என்ற திரைப்படத்தில் வடிவேலு பேசிய எதையாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தால் கடைக்குப் போய் ஒரு வடையை வாங்கி சாப்பிடு என்ற திரைப்பட காட்சியை அப்படியே உல்டா வாக்கி விஜயகாந்திற்கு முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருந்தால் யாரிடமாவது ஒரு 5 கோடி அல்லது 10 கோடி கொடுத்து சினிமா எடுக்கச் சொல்லி முதல்வர் இன்று நடித்துக் கொள்ளட்டும் எனவும் உண்மையிலேயே முதல்வர் ஆக வேண்டும் என்றால் அது நடக்கக் கூடிய காரியம் அல்ல என்றெல்லாம் பிரச்சாரம் செய்தார்.

இப்போது 2011ஆம் ஆண்டு வடிவேலு தொடர்ந்து விமர்சனம் செய்த அதே விஜயகாந்திடம் திமுக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக அறிந்த வடிவேலு மிகுந்த வேதனை அடைந்துள்ளார் இது சம்பந்தமாக வடிவேலுக்கு நெருக்கமான சிலர் கூறுகையில் அவர் இனி அரசியலே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார் எனவும் அவர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கின்றார் எனவும் தெரிவித்தனர் இது ஒருபுறமிருக்க நடிகர் வடிவேலுக்கு பாரதிய ஜனதா கட்சி ஒரு வலையை விரித்து பார்க்கிறது ஆகவே அவர் பாரதிய ஜனதாவில் இணையபோகிறார் என்று பரவலாக பேசப்படுகிறது.

இதுபற்றி வடிவேலுவின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தபோது சினிமாவில் வேண்டுமென்றால் அரசியல் காட்சியில் நடிக்கலாம் ஆனால் அவர் இனிமேல் நிஜவாழ்க்கையில் அரசியல் பக்கம் தலை வைத்து கூட கொடுக்க மாட்டார் என்று சொல்கிறார்கள்.