நீங்கல்லாம் மக்களை எப்படி மதிப்பீங்க …..! குஷ்பு விளாசல்…..!

0
198

மத்திய பிரதேசத்தில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளரை தகாத முறையில் பேசிய முன்னாள் முதல்வர் கமல்நாத் அவர்களுக்கு நடிகை குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தவர் எம் ஆர் டி தேவி இவர் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடவுள்ளார் இந்த நிலையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த காங்கிரசை சார்ந்த முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் மேடையில் பேசிய போது, பாஜக வேட்பாளர் இமார்டி தேவியை தகாத முறையில் விமர்சித்து பேசியதை தேசிய பெண்கள் ஆணையம் கண்டித்துள்ளது, இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மௌனமாக இருப்பது ஏன் என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்த நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது ஒரு சில ஆண்களின் இது போன்ற மனநிலை எப்போதும் மாறவே மாறாது ஒரு பெண்ணை விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் அவரைப் பற்றி தவறாக பேசுவது அநேக ஆண்களின் மன நிலையாக இருக்கின்றது. திரு கமல்நாத் இடமிருந்து இதுபோன்ற ஒரு செயலை நான் எதிர்பார்க்கவே இல்லை எனவும், தாங்கள் செய்த தவறை மறைப்பதற்காக ஆண்கள் தெரிந்து வைத்திருக்கும் ஒரே வழி இது மட்டும்தானா எனவும், ஒரு பெண்ணை மதிக்கத் தெரியாத நீங்கள் எப்படி வாக்காளர்களை மதிப்பீர்கள் என்று தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதோடு, ஒரு பெண்ணை அருவருக்கத்தக்க ஒரு வார்த்தையை கூறி விமர்சித்த வரை மன்னிப்பு கேட்க சொல்லக்கூட அந்த கட்சியின் தலைமை விரும்பவில்லை எனவே நான் அந்த கட்சியில் இருந்து விலகியது சரியான முடிவுதான் என்பதை அந்தக் கட்சி மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Previous articleவேளாண் துறையில் வேலை வேண்டுமா? உடனே Apply பண்ணுங்க!
Next articleவைகைப்புயல் வடிவேலு மறுபடியும் அரசியல் களத்தில்…..? கிடைத்தது ருசிகர தகவல் ……!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here