நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… பிரபல ஓடிடியோடு கூட்டணி!

0
93

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… பிரபல ஓடிடியோடு கூட்டணி!

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு கதாநாயகனாக நடித்து வருகிறார்.

பல வருட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாக பிரச்சனையால் நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு தடையை சமீபத்தில் தான் நீக்கியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். இந்நிலையில் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

லைகா தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இயக்குனர் சுராஜ் இயக்கியுள்ளார். அக்டோபரில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் ஒரு பாடலை வடிவேலுவே பாடியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அந்த பாடலுக்கான நடனத்தைதான் பிரபுதேவா அமைத்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே அஜித்தின் துணிவு உள்ளிட்ட பல படங்களின் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.