வைகை புயல் வடிவேலு படத்திற்கு டப்பிங் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரல்!!

0
126
Vaigai Puyal Vadivelu's dubbing video has gone viral on the internet!!
Vaigai Puyal Vadivelu's dubbing video has gone viral on the internet!!Vaigai Puyal Vadivelu's dubbing video has gone viral on the internet!!

வைகை புயல் வடிவேலு படத்திற்கு டப்பிங் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரல்!!

2005 ஆம் ஆண்டு சந்திரமுகி என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தை பி.வாசு இயக்கி இருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்து இருந்தார். மேலும் இந்த படத்தில் நயன்தார, ஜோதிகா, வடிவேல் மற்றும் பிரபு போன்ற நடிகர்கள் நடித்து இருந்தர்கள். இந்த படம் கன்னட படமான அபாமித்ராவின் ரீமேக் ஆகும்.

அதனையடுத்து இந்த படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்திருந்தார். மேலும் இந்த படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து 64 கோடி ரூபாய் வசூல் பெற்றது. இதனை தொடர்ந்து சந்திரமுகி 2 படத்தை இயக்க இயக்குனர் பி.வாசு முடிவு செய்தார். இந்த நிலையில் இந்த படத்தை ராகவா லாரன்ஸ் வைத்து எடுத்து வருகிறார்கள்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதாக படக்குழு அறிவித்திருந்து. சந்திரமுகி 2 படத்திற்கு MM கீரவாணி இசையமைத்துள்ளார். மேலும் RRR படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது அது போல இந்த படத்திற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை முழுவதும் பார்த்த கீரவாணி ட்விட்  செய்து இருந்தார். .

அதனை தொடர்ந்து சந்திரமுகி 2 படம் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு திரையரங்களில் வெளியாக உள்ளது. இந்த பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட படத்தை  லைகா தயாரித்திருக்கிறது.

தற்போது படத்தின் டப்பிங் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடை டப்பிங் பணியை செய்து வருகிறார் என்று லைகா நிறுவனம் தெரிவித்திருந்து. இந்த நிலையில் நடிகர் வைகை புயல் வடிவேலு லைவ் டப்பிங் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த விடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Previous articleவிவசாயிகளுக்கு ஜாக்பாட் 2 லட்சம் பரிசு விருது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
Next articleஉங்கள் ஊருக்கும் வருகிறது “வந்தே பாரத்”!! இனி பயண நேரம் குறைவு!!