வைகாசி விசாகம் விரதம் இருப்பது எப்படி? பலன்கள் என்னென்ன?

0
199
vaikasi visakam viratham
#image_title

vaikasi visakam viratham: தமிழ் கடவுளாக உலக முழுவதும் அறியப்படுபவர் தான் முருக பெருமான். சிவப்பெருமானின் ஆறு முகங்களில் உள்ள நெற்றிக்கண் மூலம் அக்னி பிழம்பாய் பிறந்தவர் தான் முருக பெருமான். ஆறு பெருமான்களையும் கார்த்திகை பெண்கள் வளர்க்க, பிறகு தேவி பார்வதியிடம் முருகப்பெருமான் தனது ஆறு உடல்களையும் ஒரு உடலாக மாறி, ஆறு முகங்களாக காட்சியளித்த நாள் தான் இந்த வைகாசி விசாக திருநாள் ஆகும்.

முருகப்பெருமானுக்கு கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நாள் எப்படி முக்கியமோ அதே போன்று தான் இந்த வைகாசி மாதத்தில் இந்த விசாகம் நட்சத்திர நாள் சிறப்பான ஒன்று. விசாகன் என்றால் வி-என்பது பட்சி என்றும், பஞ்ச பட்சியில் முக்கிய பட்சியாக இருப்பது மயில், வி என்பது மயிலை குறிக்கிறது. சாகன் என்றால் பறப்பவர் என்று பெயர். மயில் பயணிக்கும் முருகப்பெருமானை குறிக்கிறது விசாகன் என்னும் பெயர்.

வைகாசி விசாகம் விரதம் இருக்கும் முறைகள்

முருகப்பெருமானுக்கு விரதம் (vaikasi visakam viratham irupathu eppadi) இருக்க நினைப்பவர்கள் முதலில் விரதம் இருப்பதற்கு உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.  அதிகாலை எழுந்து தலைக்குளித்து விட்டு முருகப்பெருமானை நினைத்து அவரின்திருவுருவ படத்திற்கு விளக்கேற்றி வைத்து வழிபட்டு விரதத்தை தொடங்கலாம்.

அன்றைய தினம் கந்தசஷ்டி கவசம் அல்லது ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை கூறுவது சிறப்பு.

காலை ஆகாரம் எடுத்து கொள்ளாமல் விரதத்தை தொடங்கலாம். நாள் முழுவதும் விரதம் எடுத்து மாலையில் முடித்துக்கொள்ளலாம். இயலாதவர்கள் பால், பழங்கள் சாப்பிட்டு விரதம் எடுக்கலாம்.

விரதம் எடுக்காமல் மாலையில் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வரலாம். மேலும் முருகப்பெருமானுக்கு இனிப்பு வகைகளை பிரசாதமாக படைக்கலாம். சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கி வழிபட்டால் சிறப்பு.

மேலும் வைகாசி விசாகம் அன்று முருகன் கோயில்களில் காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும் வழிபாடு நடக்கும் அதில் கலந்துக்கொண்டு பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கலாம்.

பலன்கள்

மேலும் அன்றைய தினம் இயலாதவர்களுக்கு தானம் வழங்கி வருவது முருகப்பெருமானின் முழு ஆசியும் கிடைக்கும். அன்றைய தினம் தானம் வழங்கி வந்தால் சனியினால் ஏற்படும் கர்மவினைகள் குறையும் என்பது ஜதீகம்.

வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும், எதிரிகள் தொல்லை நீங்கும். மனதில் ஏற்படும் குழப்பம் கலந்த கவலை நீங்கும்.

மேலும் படிக்க: Vaikasi Visakam 2024: வைகாசி விசாகத்தில் முருகப்பெருமானை வழிபட சிறந்த நேரம் எது..!