நிர்வாக காரணமாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களை இரண்டாகப் பிரித்து வைகோ அறிவிப்பு !!

Photo of author

By Parthipan K

நிர்வாக காரணமாக மதிமுகவில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை இரண்டாக பிரித்து வைகோ அறிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிமுக நிர்வாக பணிக்காக ,சில மாவட்டங்களை இரண்டாகவும் மற்றும் ஒரு சில மாவட்டங்களை மூன்றாகவும் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அதில் காஞ்சிபுரம் மாவட்டம் பொறுப்பாளர் வளையாபதி, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மா .வை. மகேந்திரன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பார்த்திபன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

மேலும் புதியதாக விவசாய அணிச் செயலாளராக புலவர் க .முருகேசன் அவர்களும், தேர்தல் பணி செயலாளராக வழக்கறிஞராக ஆவடி ரா .அந்திரிகாஸ்,மற்றும் தேர்தல் பணி துணைச்செயலாளராக மேலும் ஒருவர் வழக்கறிஞராக ரா. செந்தில் செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.