தமிழக அரசுக்கு வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை! செவிசாய்க்குமா திமுக அரசு?

Photo of author

By Sakthi

மேடை மெல்லிசை கலைஞர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்திருக்கின்றார்.இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை மெல்லிசை கலைஞர்கள் இருந்து வருகிறார்கள். அவர்களுடன் குடும்ப உறுப்பினர்களும் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். இசை தொழிலை நம்பியே இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

கோவில் திருவிழாக்கள், திருமணம் மற்றும் மங்கள நிகழ்ச்சிகள் அரசு விழாக்கள் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்று கொள்கின்ற பொது நிகழ்ச்சிகள், இதைப்போன்ற நிகழ்ச்சிகளில் மேடை மெல்லிசை கச்சேரிகள் நடந்து வந்தனர். நோய்த்தொற்று பாதிப்பின்போது அவர்களுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி விட்டது என்று தெரிவித்திருக்கிறார் வைகோ.

அவர்களுக்கு இந்த தொழிலை தவிர்த்து வேறு எந்த தொழிலும் செய்ய இயலாத மற்றும் செய்ய தெரியாத கலைஞர்களும் இருக்கிறார்கள். அவர்களை போன்றவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இசை நிகழ்ச்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் அவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. உணவகங்களிலும் சிறு கடைகளிலும் குறைந்த ஊதியத்திற்கு பணிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார்.

கலைகளை வளர்த்தெடுத்த தமிழ்நாட்டில் இசை கலைஞர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கும் விதத்தில் காவல்துறையின் அனுமதியுடன் இசைக்கச்சேரிகள் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி தரவேண்டும் என்று தெரிவித்து இருப்பதோடு தமிழக அரசு மேடையில் இசை கலைஞர்களுக்கு உதவித்தொகைகள் கிடைத்திட வழி செய்ய வேண்டும். அவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ.