வெங்கட் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜாவை தன் பாட்டால் வாயடைக்க வைத்த வாலி அவர்கள்!!

Photo of author

By Gayathri

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய வேகமான இசைக்கு கவிஞர் வாலி அவர்களால் எவ்வாறு பார்த்து எழுத முடியும் என்ற கேள்வியுடன் அவரிடம் சென்றுள்ளார். சர்வ சாதாரணமாக மெகா ஹிட் பாட்டினை எழுதிக் கொடுத்துள்ளார் கவிஞர் வாலி அவர்கள். இதனால் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வாயடைத்து நின்றுள்ளனர்.

பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிப்பில் வெளியான “அரவிந்தன்” என்கின்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் யுவன் சங்கர் ராஜா. இவருடைய குடும்பத்தில் அப்பா, அக்கா மற்றும் சித்தப்பா என அனைவரும் இசையுடனே வாழ்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான “மன்மத லீலை” என்கின்ற திரைப்படத்தை தவிர, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களுக்கும் யுவன் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான “சென்னை 28” திரைப்படம் தொடங்கி, இந்த 2024 ஆம் ஆண்டு வெளியான “கோட்” திரைப்படம் வரை வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.

யுவன் மியூசிக் என்றாலே இசைக்க அடிமையான அனைவரிடமும் ஒரு தனி பிளே லிஸ்ட் இருக்கும். அந்த அளவிற்கு ரசிகர்களை தன் பால் இசையால் ஈர்த்து உள்ள யுவன் சங்கர் ராஜா.

அந்த வகையில் கடந்த 2011ம் ஆண்டு தல அஜித் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம் தான் “மங்காத்தா”. இப்படத்தில் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆனது.

என் நண்பனே என்னை ஏத்தாய்” போன்ற பாடல்களுக்கு வரிகளில் எழுதியது வாலிபக் கவிஞர் வாலி தான். அதிலும் குறிப்பாக மது ஸ்ரீ மற்றும் யுவன் சங்கர் ராஜா குரலில் ஒலித்த “என் நண்பனே என்னை ஏய்த்தாய்” என்கின்ற பாடலுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் எப்போதும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்பாடல் உருவான கதை மிகவும் சுவாரசியமாக உள்ளது. அது, இந்த பாடலை பொறுத்தவரை இதனுடைய மெட்டு மிகவும் கஷ்டமான முறையில் அமைக்கப்பட்டது. வேகமாக டியூன் நகர்ந்து செல்ல இதற்கு எப்படி வாலி வரிகளை எழுத போகிறார் என்கின்ற ஒரு சந்தேகத்தில் யுவன் சங்கர் ராஜா டியூனை அமைக்க ஆனால் வாலி அவர்களோ சர்வ சாதாரணமாக இதற்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

அப்பாடல் வரிகள், ” முதல்வரி முதல் முழுவதும் பிழை, விழிகளின் வழி விழுந்தது மழை, எல்லாம் உன்னால் தான். இதுவா உந்தன் நியாயங்கள், எனக்கேன் இந்த காயங்கள்.. கிழித்தாய் ஒரு காதல் ஓவியம் ” . யுவன் சங்கர் ராஜாவினுடைய வேகமான இசைக்கு வேகமாக பாடல் வரிகளை கவிஞர் வாலி அவர்கள் எழுதி கொடுத்தது இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜாவே வாயடைக்க வைத்தது என்று கூறுகின்றனர்.