வலிமை ரிலீஸ் தேதி அறிவிப்பு! அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி!

Photo of author

By Parthipan K

வலிமை ரிலீஸ் தேதி அறிவிப்பு! அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி!

நடிகர் அஜித்குமார் தற்போது வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார்.தல என்று செல்லமாக ரசிகர்கள் இவரை அழைப்பது வழக்கம்.இவர் கடைசியாக நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்தார்.இயக்குனர் ஹெச்.வினோத் இந்த படத்தை இயக்கினார்.இந்தத் திரைப்படம் பாலிவுட் திரைப்படமான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும்.இந்த திரைப்படத்தை பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரித்தார்.இந்த திரைப்படம் வணிக ரீதியாக நல்ல வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து இதே கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்தது.அந்தத் திரைப்படத்திற்கு வலிமை என்று பெயர் வைத்தனர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அறிவிப்பு வெளியானது.பின்பு கொரோனாத் தொற்று காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் தாமதம் ஆனது.இதனையடுத்து வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டரும் முதல் பாடலான நாங்க வேற மாரி பாடலும் வெளியானது.இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறுவதாக படக்குழு அறிவித்துள்ளது.படத்தில் ஒரு பைக் சண்டைக் காட்சி எடுக்கவிருப்பதாகவும் அதற்காக ஏற்கனவே படக்குழு ரஷ்யா சென்றுவிட்டதாகவும் நடிகர் அஜித்குமார் நாளை ரஷ்யாவிற்கு செல்லவிருப்பதாகவும் படக்குழு தெரிவித்தது.பைக் சண்டைக்காட்சி எடுக்கவிருப்பதால் அதற்காக முன்னேற்பாடுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.மேலும் இந்த காட்சிகள் எடுத்து முடித்தவுடன் வலிமை படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் எனவும் படக்குழு தெரிவித்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் நடிகர் அஜித்குமார் படக்குழு அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக கூறியுள்ளாராம்.நடிகர் அஜித்குமார் நடிக்கும் வலிமை திரைப்படம் தீபாவளிக்கு நவம்பர் 12ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளார்களாம்.ஏற்கனவே நடிகர் ரஜினி நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படக்குழு நவம்பர் 4 அன்று படத்தை வெளியிடுவோம் என அறிவித்துள்ளனர்.இதனால் தீபாவளிக்கு வலிமை திரைப்படமும் அண்ணாத்த திரைப்படமும் நேருக்கு நேர் மோதும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.