அஜித்தின் வலிமை திரைப்பட ரிலீஸ் தள்ளி போகுமா? புதியதாக எழுந்துள்ள குழப்பம்

Photo of author

By Anand

அஜித்தின் வலிமை திரைப்பட ரிலீஸ் தள்ளி போகுமா? புதியதாக எழுந்துள்ள குழப்பம்

Anand

valimai release will be postponed

அஜித்தின் வலிமை திரைப்பட ரிலீஸ் தள்ளி போகுமா? புதியதாக எழுந்துள்ள குழப்பம்

பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள உள்ள வலிமை திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.இந்த திரைப்படத்தின் ரிலீஸ் எப்போ என அவரது ரசிகர்கள் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்த நிலையில் தற்போது ஒரு வழியாக பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய அறிவித்திருந்தனர்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆவதாக தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் ஜனவரி 13 ஆம் தேதி வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் தற்போதுள்ள கட்டுப்பாடால் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகளால் வலிமை வெளியீட்டில் மாற்றம் வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.முன்னணி நடிகர்கள் படம் என்றாலே ஏற்கனவே இருக்கும் இருக்கைகளே போதாமல் நின்று கொண்டு பார்க்கும் அளவிற்கு கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில் பாதி இருக்கைகளில் மட்டுமே அனுமதி என்பதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இதனால் ஏற்படும் பிரச்சனைகளை தியேட்டர் நிர்வாகத்தால் சமாளிக்க முடியுமா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.இந்த கட்டுப்பாடு காரணமாக படத்தின் வசூல் பாதியாக குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இதனால் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் வலிமை படம் வருமா வராதா என்ற பரப்பரப்பும் தொற்றிக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.