வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!!படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

0
385

வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!!படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

கடந்த ஒரு வருடங்களாக வலிமை படத்தின் அப்டேட்டுக்காக அஜித்தின் ரசிகர்கள் ஏங்கித் தவித்தனர். இந்நிலையில் வலிமை படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் வெளியீட்டுக்கு ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளன. ஏற்கனவே இப்படத்தின் டீசர், பாடல்கள், மேக்கிங் வீடியோ ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், வலிமை படத்தின் டிரெய்லர் அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி வலிமை படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Previous articleபிரதமர் மோடியின் அதிநவீன வசதிகள் பொருந்திய புதிய கார்! மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!
Next articleஅரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்! அதிரடியான புதிய உத்தரவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here