வள்ளிமலை சுப்பிரமணியசாமி தெப்பத் திருவிழாவிற்கு தடை! மாவட்ட நிர்வாகம் அதிரடி!

0
168

வேலூர் மாவட்டத்தில் இருக்கின்ற பனிமலை சுப்பிரமணியசுவாமி நடக்கும் ஆடிக்கிருத்திகை திருவிழா மிகவும் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள் என்று சொல்லப்படுகிறது.இந்த நிலையில், இந்த வருடத்திற்கான ஆடிக்கிருத்திகை திருவிழா நடத்துவதற்கும் காவடி எடுத்து வருவதற்கும், வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறார்.அவருடைய இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது குறித்தும், திருவிழா குறித்தும், ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் அந்த கோவில் வளாகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வேலூர் உதவி ஆட்சியர் விஷ்ணு பிரியா தலைமை தாங்கினார். இந்த கோவில் செயல் அலுவலர் சிவா வரவேற்றார் என்று சொல்லப்படுகிறது.

கோவிலுக்கு காவடி எடுத்து வருவதற்கும், பொங்கல் வைப்பதற்கும், அலகு குத்தி பிரார்த்தனை செய்வதற்கும், அங்கபிரதட்சணம் செய்வதற்கும் மற்றும் மற்ற பிரார்த்தனைகளுக்கும், தடை விதிக்கப்படுகிறது. பக்தர்கள் பங்கேற்புடன் சாமி ஊர்வலம் செல்வதற்கும், திருவிழா நடத்துவதற்கும், தடை விதிக்கப்படுகிறது. 60 வயதிற்கு அதிகமானோர் கர்ப்பிணி பெண்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் விழாவில் பங்கேற்பதற்கு அனுமதி இல்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் எல்லோரும் முகக்கவசம் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

கோவிலுக்கு வரும் பக்தர்களை வரிசைப்படுத்தி ஒரு சமயத்தில் 20 நபர்களை மட்டுமே கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் கோவில் வளாகத்தில் பூ, தேங்காய், பழம், போன்றவற்றை விற்க தடை விதிக்க படுகிறது. இசை கச்சேரி, ஆடல் பாடல் நிகழ்ச்சி, பஜனை மற்றும் நாடகம் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு,ம் பக்தர்களுக்கு மொட்டை அடிப்பதற்கும், பிரசாதம் வழங்குவதற்கும், குளங்களில் நீர் ஆடுவதற்கும், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் வேலூர் மாவட்டம் காட்பாடி தாசில்தார் மற்றும் காவல் துறை சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, போக்குவரத்து மற்றும் மின்சாரம், தீயணைப்புத்துறை அதிகாரிகள் உற்சவ கமிட்டியை சார்ந்தவர்கள் உள்ளிட்ட விழா குழுவினர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். முடிவில் மேலாளர் நித்தியானந்தம் நன்றி தெரிவித்தார்.

Previous articleபச்சை நிறத்தில் பர்ஃபி போல இருக்கும் ரம்யா பாண்டியன்!! வெறித்துப்பார்க்கும் ரசிகர்கள்!!
Next articleகள்ளழகர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!