சேலம்: சேலம் மாவட்டம் பேளூர் அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல வேன்-ல் புறப்பட்ட போது, அந்த வேன் விளாம்பட்டி பிரிவு ரோடு அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும் சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். அந்த நிலையில் இந்த வருடமும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் தயாராகி, மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சென்று வருகிறார்கள். பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க எந்த வித குறைபாடுகள் இல்லாமல் இருக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் பேளூர் அருகே விளாம்பட்டியை சேர்ந்தவர்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல குருசாமியான செல்வன் என்பவரின் தலைமையில் நேற்று இரவு, அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அனைவரும் இருமுடி கட்டி வேனில் புறப்பட்டனர். அப்போது விளாம்பட்டி பிரிவு சாலையில் உள்ள பிரிவில் வளையும் போது திடீரென்று யாரும் எதிர்பார்க்காத விதமாக அந்த வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையோரம் விழுந்தது. அப்போது அந்த விபத்தில் காயமடைந்தவர்களை காரிப்பட்டி போலீசார் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.