வந்தாச்சு குட் நியூஸ்.. பேருந்தில் பயணிக்க இலவச டோக்கன் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

Photo of author

By Divya

வந்தாச்சு குட் நியூஸ்.. பேருந்தில் பயணிக்க இலவச டோக்கன் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

தமிழகத்தில் பிரதான போக்குவரத்தாக பேருந்து போக்குவரத்து திகழ்கிறது.பள்ளி மாணவர்கள்,கல்லூரி மாணவர்கள்,அலுவலகம் செல்வோர் என்று தினசரி பேருந்து பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இதில் பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்கள் இலவச பஸ் பாஸ் மூலம் மாநகர பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் மூத்த குடிமக்கள் டோக்கன் மூலம் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என்று மாநகரப் பேருந்து போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது.

தலைநகர் சென்னையில் வசிக்கும் 60 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடி மக்கள் வருகின்ற ஜூலை முதல் டிசம்பர் வரை மாதம் ஒன்றிற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கு கட்டணம் ஏதும் செலுத்தாமல் மாநகர பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள முடியும்.

ஜூன் 21 முதல் அடுத்த மாதம் ஜூலை 31 ஆம் தேதி வரை சென்னை பணிமனை,பேருந்து நிலையம் என்று மொத்தம் 42 இடங்களில் இலவச டோக்கன்கள் வழங்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்து வருகிறது.ஜூன் 21 முதல் ஜூலை 31 ஆகிய நாட்களில் காலை எட்டு மணி முதல் இரவு ஏழரை மணி வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பித்து மூத்த குடிமக்கள் தங்களுக்கான இலவச டோக்கன்களை பெற்றுக் கொள்ள முடியும்.

பேருந்து பயணம் மேற்கொள்வதற்கான இலவச டோக்கன்கள் பெற தேவைப்படும் ஆவணங்கள்:

1)ஸ்மார்ட் கார்டு
2)இருப்பிடச் சான்று
3)வயது சான்று(ஓட்டர் ஐடி,பான் கார்டு,ஓட்டுநர் உரிமம்,கல்விச் சான்று)
4)ஆதார் அட்டை
5)பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு