8 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும்..! மகிழ்ச்சியில் பார்வையாளர்கள்!

0
144

8 மாதங்களுக்கு பிறகு வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. மேலும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

  • அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா காலை 9 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே செயல்படும்.
  • பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் நுழைவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்.
  • பூங்காவிற்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
  • 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • இதற்கான நுழைவுச் சீட்டுகளை ‘vandalur zoo’ என்ற செயலி மூலம் அல்லது பூங்காவில் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
  • அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது பூங்கா திறக்கப்படுவதனால் 8 மாத காலமாக வாழ்வாதாரத்தை இழந்து வந்த இப்பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Previous article5.18 கோடியை கடந்த பாதிப்பு: 12 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்பு!
Next article86 லட்சத்தை கடந்த பாதிப்பு: 1.27 லட்சத்தை கடந்த உயிரிழப்பு!