டிவி ஷோவில் இவருடன் மோதிய வனிதா! வெளியேறிய உண்மை காரணம் இதுதானாம்!

Photo of author

By Hasini

டிவி ஷோவில் இவருடன் மோதிய வனிதா! வெளியேறிய உண்மை காரணம் இதுதானாம்!

Hasini

Vanitha clashes with him on TV show! This is the real reason for leaving!

டிவி ஷோவில் இவருடன் மோதிய வனிதா! வெளியேறிய உண்மை காரணம் இதுதானாம்!

பொதுவாக சினிமா நடிகர், நடிகைகள் என்றாலே அவர்கள் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒரு விஷயமாக இருக்கும். தற்போது அந்த வகையில் வனிதா மட்டுமே தொடர்ந்து ஏதோ ஒரு பிரச்சினையில் சிக்கி தவித்து வருகிறார். தற்போது நடிகை வனிதா 3-வது திருமண சர்ச்சையில் சிக்கி மீண்டும் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

அந்த நிகழ்ச்சியில் தன்னை அவமதித்து துன்புறுத்தியதாக குற்றம்சாட்டி சிறிது நாட்களுக்கு முன் வெளியேறியுள்ளார். இதுகுறித்து வனிதா தரப்பில் கூறப்பட்டுள்ள அறிக்கையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன். அதிகார துஷ்பிரயோகம், துன்புறுத்தல்களை நான் ஏற்பது இல்லை. ஆனால் பணி செய்த இடத்தில் எனது வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத நபரால் துன்புறுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, நியாயமற்ற முறையிலும் நடத்தப்பட்டேன். வேலை செய்யும் இடத்தில் பெண்களை ஆண்கள் மட்டும் மோசமாக நடத்தவில்லை. பெண்களும் அது போல்தான் நடந்து பொறாமைப்படும் வாய்ப்புகளை அழிக்க முயற்சிப்பது, மோசமான செயலாக செய்கின்றனர். வயதில் மூத்தவர், முன்னேற கஷ்டப்படுபவர்கள் இழிவாக பார்ப்பதும் அவமானப்படுத்துவதும் நடக்கிறது கணவரின் ஆதரவு இல்லாமல் சாதிக்கத் துடிக்கும் என்னையும் துன்புறுத்துகிறார் என்று தெரிவித்துள்ளார்.

நடிகை ரம்யா கிருஷ்ணனை தான் வனிதா மறைமுகமாக சாடி இருப்பதாக அனைவரும் கூறுகின்றனர். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதாவின் நடிப்பு சிறப்பாக இல்லை என்று, நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணன் பத்துக்கு ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்கள் மட்டுமே அளித்ததாகவும், இதனால்தான் வனிதா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார், என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இது குறித்து ரம்யா கிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பிய போது அவர் இந்த கருத்துக்களுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை.